“காதல் தோல்வி”
காதல் என்று வந்து விட்டால், காதல் தோல்வி என்பது ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல் சாதாரண விடயம். மாத்தளை ராமு வேணியிடம் தோல்வியுற்றுக், காதல் காச்சலில் தவிக்கிறான். ஓழுங்காகச் சாப்பிடுவதும் இல்லை, தூங்குவதும் இல்லை. கொஞ்சமாவது மனதைத் தேற்றிக் கொள்வதற்கு வீட்டின் பொது அறையில் உள்ள டேப் ரெக்கோடரில்
“… பெண்ணைப் படைக்காதே பிரம்மனே
பாவம் ஆண்களே பரிதாபம் நாங்களே
எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம்… “
என்ற பாடல் வரிகளைத் திரும்பத் திரும்ப ரிவைன்ட் செய்து செய்து கேட்டுக் கொண்டிருக்கிறான்.
ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத இராணுவ ஒடுக்குமுறையினதும் யுத்த வெற்றி என்ற மமதையினதும் எதிர்விளைவேயாகும். இத்தீர்மானமும் அதன் மீதான விவாதங்களும் சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்திற்குத் தரக்குறைவையும் தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை இலங்கை மீது தனது ஆதிக்கப்பிடியை ஐ.நா. மூலம் வலுப்படுத்திக் கொள்வதற்குக் காத்திருந்த அமெரிக்காவிற்கு ஜெனிவாத் தீர்மானம் தகுந்த சந்தர்ப்பத்தையும் வழங்கியுள்ளது. இவற்றுக்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியும் அவரது தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமுமே ஏற்றுக் கொள்ளவேண்டும்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் பூதாகாரமாகி வருகின்றன அவற்றின் வெளிப்பாடாகவே அண்மையில் டீசல், பெற்றோல், மண்ணெண்ணெயின் விலைகளும் மின்சாரக்கட்டணமும் உயர்த்தப்பட்டன. அதன்மூலம் சகல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் போக்குவரத்துக் கட்டணங்களும் தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன. தொடர்ந்து விலை அதிகரிப்புக்களும் கட்டண உயர்வுகளும் இடம்பெறப்போகின்றன. இவை இன மொழி மத பேதமின்றி அனைத்து உழைப்புக்கும் மக்களுக்கு எதிரானவைகளேயாகும் தமது ஆட்சி அதிகாரத்தை தேவைக்காக மக்களை இனப்பகை மூலம் பிரித்து வைத்தும் பொருளாதார நெருக்கடிகளை எல்லா மக்களின் மீதும் சுமத்தியிருக்கின்றனர். இதனால் தெற்கிலே உழழைக்கும் சிங்கள மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். பறிக்கப்படும் தமது வாழ்வாதாரங்களுக்கும் உரிமைகளுக்கும் போராட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கு எதிராக நீட்டப்பட்டுவந்த துப்பாக்கிகள் இப்போது தெற்கின் மக்களுக்கு எதிராகத் திருப்பப்பட்டுள்ளன. அதன் மூலம் மகிந்த சிந்தனை …
ஏலவே வடக்குக் கிழக்கு மக்களை யுத்தத்தால் கொன்றொழித்து, வந்த பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இப்போது நாட்டின் ஏகப் பெரும்பான்மையான அனைத்துத் தொழிலாளர்கள் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்களை விலை உயர்வுகளால் சாகடிக்க ஆரம்பித்துள்ளது. இவ் இடத்தில் இன, மொழி, மதப் பேதங்களுக்க அப்பால் அனைத்து உழைக்கும் மக்களும் ஐக்கியப்பட்டு வீதியில் இறங்கிப் போராடுவதே ஒரே மார்க்கமாகும்.
அமெரிக்காவுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அமெரிக்கச் சனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையிலிருந்து அழைப்பு வந்ததாக நமக்குச் சொல்லப்பட்டது. பின்பு அமெரிக்க அரசுத் திணைக்களத்திலிருந்து அழைப்பு வந்ததாகச் சொல்லப்பட்டது. இரா. சம்பந்தனைத் தலைவராகக் கொண்ட நால்வர் குழு ஒக்ற்றோபர் 25ம் திகதி விமானமேறியது. இது நல்ல வாய்ப்பு எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் ஆரவாரித்தன. புலிகளின் தோல்வியை அடுத்து மகிந்த சிந்தனை ஆட்சியின் பேரினவாதச் செய்நிரல் துரிதமாக முன்னெடுக்கப்படும் ஒரு சூழலிற், கூட்டமைப்பின் அரசியல் இயலாமையின் அரசியலாகவே இருந்துவருகிறது. வடக்கு-கிழக்கில் வாக்குக்கள் பெறும் அலுவலைத் தவிர வேறெதையுமே கவனியாத கூட்டமைப்பு, இந்திய அழுத்தத்தின் கீழ் அரசாங்கத்துடன் பதினொரு முறை பேசியும் அரசாங்கத் தரப்பிலிருந்து எதையுமே வெல்லத் தவறிவிட்டது. இந் நிலையில் அமெரிக்காவின் ‘அழைப்பு’ நீரில் மூழ்குகிறவனின் கைக்கு எட்டிய ஒரு கயிறாகத் தெரிந்தது.
அந்த அழைப்புப் பற்றி ஐயங்கள் …