துலா

யாழ்ப்பாணத்து ஊடகங்களின் அயோக்கியத்தனம்!
வடபுலத்துப் போர்ச் சூழலால் இயல்பு வாழ்வும் ஜனநாயகமும் கடந்த காலங்களில் மறுக்கப்பட்டு வந்தது. போர் முடிந்த பின்பும் அதே நிலை தொடருகிறது. இதன் மத்தியிலேயே இம்முறை மேதினம் யாழ்ப்பாணத்தில் பேரணிகளுடன் கொண்டாடப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி தமது தமிழ் மேட்டுக்குடிச் சகாவான தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கூட்டு மேதினம் கொண்டாடியது. தெற்கிலிருந்து பெருந்தொகையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியால் பேரணிக்கும் கூட்டத்துக்கும் கொண்டுவரப்பட்டிருந்தனர். இதனை வேறொரு கட்சியினர் செய்திருந்தால் யாழ்ப்பாண ஊடகங்கள் எகிறிக்குதித்து இனவாதத்தையும் இனவெறியையும் எழுதித் தள்ளியிருப்பார்கள். ஆனால் இது மேட்டுக்குடிக் கூட்டு என்பதால் அதனை அடக்கி வாசித்துக்கொண்டனர். இது தமிழர் பழைமைவாத ஆதிக்க அரசியலுக்கு வக்காலத்து வாங்கும் யாழ்ப்பாணப் பத்திரிகைகளின் பத்திரிகா தர்மமாகும். அத்துடன் சிங்கக்கொடி பிடித்த ரணில் சம்பந்தன் கூட்டுக்கரங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு சிறு பகுதியைத்தானும் புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிசக் கட்சி (NDMLP) யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பாக நடத்திய சைக்கிள் பேரணிக்கும் கூட்டத்திற்கும் கொடுக்க மறுத்துவிட்டனர்.

மேற்படிப் புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிசக் கட்சியின் மேதினப் பேரணியும் கூட்டமும் செஞ்சட்டைகளுடனும் செங்கொடிகளுடனும் மிகவும் எழுச்சிகரமாக சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை நடாத்தப்பட்டது.

அரசாங்க எதிர்ப்பு முழக்கங்கள் பிரதான இடத்தைப் பிடித்திருந்தன. பொருட்கள் மீதான விலையேற்றத்தை எதிர்த்தும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பைக் கண்டித்தும் அரசியல் தீர்வை வலியுறுத்தியும் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சுயாட்சி வழங்கக்கோரியும் தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக மக்களின் ஐக்கியத்தை வலியுறுத்தியும் தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதலைக் கண்டித்தும் உழைக்கும் தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும் வெகுஜனப் போராட்டப் பாதையில் அணிதிரளக்கோரியும் ‘ரணில் சம்பந்தன் கூட்டு தமிழ் மக்களுக்கு வேட்டு’ என்றும் இந்திய அமெரிக்க தலையீட்டை எதிர்த்தும் பேரணியில் முழக்கங்கள் முழங்கப்பட்டன.

இவற்றைப் பார்த்த மக்கள் மிகவும் வியப்புடனும் அவதானத்துடனும் பேரணிக்கு ஆதரவு கொடுத்தனர். அவ்வாறே மேதினப் பொதுக்கூட்டமும் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்ட கூட்டமாக அமைந்திருந்தது. கட்சியின் வடபிரதேசச் செயலாளர் தோழர் கா. செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சி. கா செந்திவேல் பிரதான உரையை ஆற்றினார். தொழிற்சங்க, வெகுஜன, பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர். கட்சியின் கலைக்குழுவினரால் புரட்சிகரப் பாடல்கள் இடையிடையே பாடப்பட்டன. பெருந்தொகையான பொலிசாரும் புலனாய்வுத்துறையினரும் பேரணியையும் கூட்டத்தினையும் நோட்டமிட்டவாறே இருந்தனர். ஆனால் மக்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு யாழ்ப்பாண வீதிகளில் செங்கொடிகளும் செஞ்சட்டைகளும் அணிவகுத்து வந்த காட்சிகளும் உணர்ச்சிகர முழங்களும் புரட்சிகர இயக்கத்தை முன்தள்ளுவதற்கான அடையாளமாகக் கண்டனர்.

இவ்வாறான புரட்சிகர மேதினப் பேரணியையும் பொதுக்கூட்டத்தையும் பற்றி  யாழ்ப்பாண நகரத்திலிருந்து வெளிவரும் நான்கு நாளிதழ்களான உதயன், யாழ் தினக்குரல், வலம்புரி, தினமுரசு ஆகியவற்றில் ஒரு வரி கூட எழுதப்படவில்லை. நான்கு நாட்களாகியும் இந்த நான்கு நாளிதழ்களும் தமது வக்கிரமான மௌனத்தைக் கடைப்பிடித்து வருகின்றன. இது ஏன்?

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் பெரும் சத்தத்துடன் வாயுபறிந்தால் அதில் தமிழ்த்தேசிய மணம் வீசுவதாக இப்பத்திரிகைகள் தமிழ் மக்களுக்கு விளக்கம் கொடுப்பார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உழைக்கும் தமிழ்மக்களான தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தனியார் துறை ஊழியர்கள், போன்றவர்களின் பிரச்சினைகளை முன்வைத்தும் அவற்றுக்கான தீர்வை வற்புறுத்தியும் இடம்பெற்ற உணர்வு பூர்வமான இவ்விடதுசாரி மேதினம் பற்றி இருட்டடிப்புச் செய்தமையானது இந்த யாழ்ப்பணாத்துத் தமிழ் ஊடகங்களின் நடுநிலை, சுதந்திரக்குரல், தமிழ்த்தேசிய பாதுகாப்பு போன்ற போலித்தனங்களை அம்பலமாக்கியுள்ளது.

தமிழ்மக்கள் மத்தியில் ஊடக வியாபாரத்தை நடாத்தும் ஊடக முதலாளிகளின் பைகளை நிரப்புகின்ற அதேவேளை மக்கள் மத்தியில் மாற்று அரசியற் கருத்தும் மாற்றுச் சிந்தனையும் வரக்கூடாது என்பதில் அவை மிக அக்கறையாக இருக்கின்றன என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

இதனை ஊடக அயோக்கியத்தனம் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது?  இவ்வூடக இருட்டடிப்புப் பற்றி வடபுலத்து இளம் தலைமுறையினர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

துலா

thulaa.net

04-05-2012

ஆட்சி மாற்றத்தால் தமிழர் உரிமை கிடைக்காது. மக்களுக்கான அரசியலை புதியதிசையில் முன்னெடுக்கவேண்டும்
இன்றைய மகிந்த சிந்தனை ஆட்சி நீடிப்பதால் தமிழ், முஸ்லீம், மலையகத்தமிழ் தேசிய இனங்களுக்கு விடிவு ஏற்படப் போவதில்லை. அதே போன்று ஏகப்பெரும்பான்மையான சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எவ்வித பொருளாதார அரசியல் விமோசனங்களும் கிடைக்கமாட்டாது. அதேவேளை ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு ஜக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆட்கள் மாறுவார்களே தவிர இன்றைய பேரினவாத தரகு முதலாளித்துவ ஆட்சி அமைப்பே நீடித்துச் செல்லும்.

இத்தகைய சூழலில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி நிற்கும் தமிழ் மக்களும் ஏனைய தேசிய இனங்களும் தமக்குள் ஜக்கியப்பட்டுப் புதிய அரசியல் திசை மார்க்கத்தில் தூரநோக்குடனான தெளிவான மாற்றுக் கொள்கைகளை முன்னெடுக்கும் பொது வேலைத்திட்டத்துடன் செயற்பட முன்வர வேண்டும். அத்தகைய அரசியல் பொது வேலைத்திட்டத்தின் மூலம் பரந்து பட்ட வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் சக்தியைக் கட்டி எழுப்புதல் வேண்டும். அதற்கான திடசங்கற்பத்தைப் போராட்டத்தில் பிறந்த இப் புரட்சிகர நாளான மேதினத்தில் எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

இன்றைய இலங்கையின் பொருளாதார அரசியல் சமூக நெருக்கடிகளுக்கு ஆட்சி மாற்றம் வந்து விட்டால் யாவும் தீர்ந்து விடும் என்ற பாராளுமன்ற வழிபாட்டுக் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. அந்த ஆட்சி மாற்றம் ரணில் தலைமையிலான ஜக்கிய தேசியக்கட்சியின் மூலம் ஏற்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவை அழைத்துக் கூட்டு மேதினம் நடாத்துகிறார்கள். தமிழ்த் தலைமைகள் எவ்வித கூச்சமும் வெட்கமும்  இன்றி யாழ் நகரத்தையும் பொது நூலகத்தையும் எரித்து பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைத் தமது பதினேழு வருட ஆட்சிக்காலத்தில் கொன்றழித்த ஜக்கியதேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து மேதினம் நடாத்துகிறார்கள். முன்பும் இதே தமிழ்த்தேசியக்கூட்டமைப்புத் தலைமையானது இறுதி யுத்தத்தை நடாத்தி தமிழ் மக்களை அழித்த தளபதி சரத்பொன்சேகாவிற்கு வாக்களிக்கும்படி தமிழ் மக்களை கேட்டவர்கள். இவர்களது கூட்டு உழைக்கும் தமிழ் சிங்கள மக்களுக்கான ஜக்கியத்தை முன்வைத்த கூட்டு அல்ல. முற்றுமுழுதான தமிழ் சிங்கள மேட்டுக்குடி உயர்வர்க்க அந்நிய ஏகாதிபத்திய சக்திகளுக்கான கூட்டேயாகும். இதனை நம்பித் தமிழ் மக்கள் ஏமாறுவார்களேயானால் மீண்டும் அழிவுகளையும் நாசங்களையும் தேடிக்கொள்ளவே முடியும்.

இன்றைய ஆட்சியை முன்னெடுக்கும் மகிந்த சிந்தனை அரசாங்கம் முற்று முழுதான பேரினவாத தரகு முதலாளித்துவ ஏகாதிபத்திய வழிகாட்டலிலான அரசாங்கமாகும். தனி நபர் சர்வாதிகாரமும் குடும்ப ஆட்சியும் அதன் போக்கைத் தீர்மானிக்கின்றன. இத்தகைய ஆட்சி முறை பாசிச உச்ச கட்டத்தையே நோக்கிச் செல்லுகிறது. இத்தகைய ஆட்சிக்குத் தான் பழைய சாயம் வெளுத்த இடதுசாரிகளும் சில தமிழ் முஸ்லீம் உயர்வர்க்ககத் தலைமைகளும் கை உயர்த்தி ஆதரவு கொடுத்து வருகின்றார்கள்.  உழைக்கும் சிங்களத் தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒடுக்கப்படும் தமிழ் முஸ்லீம் மலையகத் தேசிய இனங்களும் வர்க்க அடிப்படையில் அணி திரண்டு போராடவேண்டிய ஒரு வரலாற்றுத் தேவை காணப்படுகிறது. அதற்கான காலம் கனிந்து வருகிறது.

இவ்விடத்தில் ஒரு முக்கியமான விடயம் கவனிக்கப்பட வேண்டியதாகும். ஆளும் மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் பின்னால் இந்தியப்  பிராந்திய  மேலாதிக்க வல்லரசு இருந்து வருகிறது அதே வேளை ஆட்சி மாற்றத்தைக் கோரும் ஜக்கியதேசியக் கட்சியின் பின்னால் அமெரிக்க-மேற்குலக ஏகாதிபத்திய சக்திகள் இருந்து வருகின்றன.  இத்தகைய அந்நிய சக்திகளின் மீது நம்பிக்கை வைத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தமிழ்த்தலைமை எனப்படுவோரும் இலவு காத்த கிளிபோல் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இத்தலைமைகள் கடந்த காலத்தில் இருந்து எதையுமே படிக்காது மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் பிற்போக்குத் தலைமைகளாகவே இருக்கின்றனர்.

இவர்களிடம் இருந்து வருவது வெறியூட்டும் இன உணர்வும் இனவாதமும் என்ற குறுகிய தமிழ்த் தேசியவாதமேயாகும். இவற்றை மூலதனமாகக் கொண்டே தமது தமிழர் மேட்டுக்குடி ஆதிக்கப் பிற்போக்கு அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள்.

இதேநிலைதான்  தென்னிலங்கையிலும் இருந்து வருகிறது அங்கு பேரினவாதமும் பெருமுதலாளித்துவமும் ஆட்சி செய்கிறது. அதனால் தமிழ் முஸ்லீம் மலையக மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளும் பேரினவாதிகளும் வெறிகொண்டு  அலைகிறார்கள். அதன் அண்மைய வெளிப்பாடே தம்புள்ளை முஸ்லீம் பள்ளி வாசலும் இந்துக் காளி கோவிலும் தாக்கப்பட்டமையாகும்.

எனவே இனமத மொழி பிரதேச உணர்வுகளைத் தூண்டி வெறித்தனமாக்கிக் கொள்வதன் மூலம் ஆளும் வர்க்கத்தினரும் அந்தந்தத் தேசிய இனம் மத்தியிலான ஆதிக்கப் பிற்போக்கு அரசியல் சக்திகளும் வாக்குப்பெட்டிப் பாராளுமன்ற சுகபோக அரசியலை இலகுவாகவே செய்து கொள்கிறார்கள். இவற்றை நாட்டின் அனைத்து தொழிலாளர்களும் விவசாயிகளும் உழைக்கும் வர்க்க மக்களும் உரியவாறு உணர்ந்து புதிய திசையில் வெகுஜன அரசியல் பாதையில் பயணிக்க முன்வரல் வேண்டும் இதுவே எமது கட்சியின் இன்றைய புரட்சிகர மேதினச் செய்தியாகும்.

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் யாழ் நகரில் கட்சியும் அதன் வெகுஜன அமைப்புக்களும் நடாத்திய புரட்சிகர மேதினக்கூட்டத்தில் ஆற்றிய உரை.

01.05.2012

[இம் மேதினக் கூட்டத்தில் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் க.தணிகாசலம், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியின் த.பிரகாஷ் பெண்கள் அமைப்புப் பிரதிநிதி ஈஸ்வரி தர்மலிங்கம், தொழிற்சங்க வெகுஜன அமைப்புக்களின் சார்பாக ஆர்.தவராஜா, ரி.வி.கிருஷ்ணசாமி, ஏ.சீவரட்ணம், மு.தியாகராஜா ஆகியோர் உரையாற்றினர். உரைகளின் இடையே கட்சியின் கலைக்குழுவினர் புரட்சிகர பாடல்களைப் பாடினர்.

இம் மேதினக்கூட்டத்திற்கு முன்பாக சுன்னாகம் சந்தை வளாகத்திலிருந்து பி.ப 2.30 மணிக்கு செஞ்சட்டைகளும் முழக்க அட்டைகளும் கொண்டு முந்நூறுக்கும் மேற்பட்டோர்  சைக்கிள் பேரணியாக புரட்சிகர முழக்கங்களுடன் யாழ் நகர் நோக்கி காங்கேசன்துறை வீதிவழியாக கூட்டத்தை வந்தடைந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு செம் மேதினம் யாழ்ப்பாணத்தில் களைகட்டியிருந்தது. அதே வேளை கட்சியின் தலைமையில் அட்டன்,கொழும்பு, வவுனியா,ஆகிய பிரதேசங்களிலும் சிறப்பாகவும் புரட்சிகரமாகவும் மேதினக் கூட்டங்கள் இடம்பெற்றன.]

யாழ்ப்பாணத்தில் NDMLP யின் மேதினப் பேரணியும் பொதுக்கூட்டமும்
புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிச கட்சியின் புரட்சிகர மேதினப் பேரணியும் பொதுக்கூட்டமும் 01-05-2012 அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

கோஷங்களுடனும் பதாகைகளுடனும் சுன்னாகம் சந்தை வளாகத்திலிருந்து சைக்கிள் பேரணியாகச் சென்ற தோழர்கள் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள பட்டப்படிப்புக்கள் கல்லூரி வளாகத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தினை நடத்தினர்.

பெரும்பாலான ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்ட இப்பேரணியினதும் பொதுக்கூட்டத்தினதும் காட்சிகளை இங்கே நீங்கள் காணலாம்.

இலங்கை யில் நான்கு இடங்களில் NDMLP இனால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த மேதின நிகழ்ச்சிகள் பற்றிய விரிவான அறிக்கை விரைவில் துலாவில் வெளியாகும்.

NDMLP யாழ்நகரில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் சுருக்கம்
ஜெனிவாத் தீர்மானத்திற்குப் பின்பு நாட்டில் இனங்களுக்கிடையிலான துருவமயப்படுத்தல் செயற்பாடுகள் வேகப்படுத்தப்படுகின்றன. தீவிர பேரினவாத சக்திகளும் மதவாதிகளும் இவற்றில் முன் நிற்கின்றன. இவற்றுக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் ஆசிர்வாதமும் வழிகாட்டல்களும் உண்டு.

இத்தகைய நடவடிக்கைகள் இனப்பிளவுகளுக்கும் இனமோதல்களுக்கும் வழி வகுக்கின்றன. இதன் மூலம் மகிந்த சிந்தனை அரசாங்கமும் இந்திய அமெரிக்க வல்லரசு சக்திகளுமே இலாபமடைந்து தத்தமது நோக்கங்களை ஈடேற்றிக் கொள்கின்றன. இந் நிலையில் தமிழ் மக்கள் தமது சொந்தத் தலைவிதியை தாமே தீர்மானித்துக் கொள்ளும் புதிய அரசியல் திசை மார்க்கத்தைக் கண்டறிந்து முன்னெடுக்க முன்வரல் வேண்டும். தோல்வியடைந்த கொள்கைகளையோ அல்லது ஆட்சி மாற்றம் என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியையோ அன்றி இந்தியா அமெரிக்கா என நம்பி நின்றோ தமிழ் மக்கள் எவற்றையும் பெறப்போவதில்லை. எனவே தெளிவான கொள்கையும் தொலை நோக்குடைய வெகுஜனப் போராட்டங்களும் யதார்த்தபூர்வமான அரசியல் தந்திரோபாயங்களுமே இன்று தமிழ் மக்களுக்குத் தேவைப்படுகிறது. இதனை எதிர்வரும் மேதினத்தில் எமது கட்சி வற்புறுத்துகிறது.

இவ்வாறு புதிய ஐனநாயக மார்க்சிச லெனிசிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் யாழ் நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எடுத்துக்கூறினார்.கட்சியின் வட பிராந்திய பணிமனையில் 22.04.2012 அன்று காலை 10 மணி அளவில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது.கட்சியின் அரசியல் உறுப்பினர்களான சோ.தேவராஜா தணிகாசலம் கா.செல்வம் கதிர்காமநாதன் இளைஞர் அணியின் சார்பில் த.பிரகாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் இன்றைய நிலையில் இரண்டு முக்கிய விடயங்கள் காணப்படுகின்றன. ஓன்று, மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிகள். இரண்டாவது, தீர்வுக்குக் கொண்டு வரமறுக்கப்படும் தேசிய இனப்பிரச்சினை. முன்னையது நாட்டின் அனைத்து மக்களையும் பொருட்கள் மீதான தொடர்விலை ஏற்றங்களாகவும் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பாகவும் சமூக நெருக்கடிகளை வளர்த்துச் செல்வதாகவும் காணப்படுகின்றது. பின்னையது தமிழ் முஸ்லீம் மலையகத்தமிழ்த் தேசிய இனங்கள் மீதான, குறிப்பாக வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறையாக நீடித்துச் செல்கிறது.

இவற்றின் மத்தியில் கூறப்படும் சுதந்திரம் ஜனநாயகம் மனித உரிமைகள் மற்றும் தொழிற் சங்க உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டு தனிநபர் சர்வாதிகாரம் கோலோச்சுவதையே காணமுடிகிறது, இவை பற்றி மகிந்தசிந்தனை அரசாங்கம் கவலைப்படுவதாகவோ உரிய தீர்வுகளைக் கொண்டுவர முயற்சிப்பதாகவோ இல்லை. அங்கே குடும்ப சர்வாதிகாரமே மேலோங்கி அதிகாரத்தின் உச்சமாகக் காணப்படுகிறது.

இவற்றுக்கெதிராகக் கட்சிகளும் தொழிற் சங்கங்களும் மனித உரிமை அமைப்புக்களும் சில ஊடகங்களும் தத்தமது எல்லைக்குள் நின்றவாறு எதிர்புக்களையும் கண்டனங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் செய்து வந்த போதிலும் அவை ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைக்கப்படவில்லை. இப்பலவீனத்தை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றது. அவ்வாறே தேசிய இனப்பிரச்சினைக்குரிய தீர்வைக் கொண்டு வர விடாப்பிடியாக மறுத்து தனது பேரினவாத நிலைப்பாட்டை முன்னெடுத்தும் வருகின்றது.அதன் மூலம் ஜெனிவாத் தீர்மானத்தை தானே வரவழைத்து தன் தலையில் தன் கைகளாலே மண்ணை போட்டு நிற்கிறது.

மேலும் செந்திவேல் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கி ஊடகவியளாளர்களின் கேள்விகளுக்குப் பதிலும் வழங்கினார். தேசிய இனப்பிரச்சினையின் தீர்வின்மை பற்றிக் கூறும் போது நாட்டின் தேசிய இனப்பிரச்சினை என்பது ஒரு நூற்றாண்டு காலவளர்ச்சி பெற்ற பிரச்சினையாகி இன்று பிரதானமான ஒன்றாகக் காணப்படுகின்றது. பேரினவாத நிலைப்பாட்டில் இருந்து நோக்குவோர் இதனைச் சிறு விடயமாகவும் பிரிவினையாகக் காட்டப்படும் ஒன்றாகவுமே காணுகின்றனர்.

அவ்வாறு நோக்கும் ஆளும் சிங்கள தரகு முதலாளித்துவப் பேரினவாத சக்திகளும் ஏனைய பேரினவாத நிறுவனங்களும் அவற்றின் தலைவர்களும் உழைக்கும் சாதாரண சிங்கள மக்களை இன மத மொழி விசக் கருத்துக்களால் திசை திருப்பி வைத்திருக்கின்றனர்.

இதனை எதிர்ப்பதாகக் கூறும் தமிழ்த் தலைமைகள் இன ஒடுக்கு முறையில் இருந்து விடுபடுவதற்கு சரியானதும் யதார்த்தபூர்வமானதுமான கொள்கைகளையும் உரிய தந்திரோபாயங்களையும் முன்வைக்காது பேரினவாதத்திற்குப் பதில் குறுந் தமிழ்த் தேசியவாதத்தையே முன்னெடுத்துவந்துள்ளன. அதனை வாக்குகள் பெறும் பாராளுமன்றப் பேரம் பேசும்பொருளாகவும் வீரம் பேசும் அகிம்சை அரசியலாகவும் முன்னெடுத்து வந்தனர்.

அதன் தொடர்ச்சியே முப்பது வருடங்களுக்கு மேலாக ஆயுதப் போராட்ட அரசியலாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. யாவும் தோல்வியடைந்து தமிழ் மக்கள் அழிவுகளையும் அவலங்களையும் சுமந்து இன்னும் சரியான திசை காண முடியாத அரசியல் வனாந்தரத்தில் விடப்பட்ட மக்களாகவே இருந்து வருகின்றனர்.

அதே வேளை தமிழ்த் தலைமைகள் எவ்விதமான சுயவிமர்சனமோ சுய அரசியல் மதிப்பீடுகளோ இன்றித் தமிழ்க் காங்கிரஸ் தமிழரசுக் காலகட்ட வாக்குப்பெட்டி நிரப்பும் அரசியலுக்கு திரும்பிச் செல்ல நிற்கிறார்கள். இதுவரையான அரசியல் அனுபவங்கள் வரலாற்றுப் பட்டறிவுகள் மூலம் சமகாலத்துக்கான தூர நோக்குடைய ஒரு கொள்கையையும் அதற்கான தந்திரோபாயங்களையும் வகுத்து முன்னெடுக்க முடியாது தமது நம்பிக்கை முழுவதையும் இந்தியாவிடமும் அமெரிக்க மேற்குலகத்திடமும் எதிர்பார்த்து நிற்கும் கையறு நிலையிலே காணப்படுகின்றனர். இந்நிலை தமிழ் மக்களுக்கு மேன்மேலும் நெருக்கடிகளையும் வெவ்வேறு நிலைப்பட்ட அழிவுகளையுமே தேடித்தரவல்லதாகக் காணப்படுகிறது.

பரந்த அடிப்படையிலும் தூர நோக்குடனும் யதார்த்தபூர்வமானதுமான குறைந்தபட்ச முற்போக்கான தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை எடுத்து நாட்டின் இடதுசாரி ஜனநாயக முற்போக்குசக்திகளுடன் இணைந்து நிற்கும் ஒரு பொதுவேலைத்திட்டத்திற்கு வருவதே தமிழ் தேசிய இனத்தின் மீது நேர்மையான அக்கறை கொண்ட தேசியவாத சக்திகளின் இன்றுள்ள கடமையாகும். இல்லாதுவிடின் பழைய பாதையில் சென்று அழிவுகள் தந்த கொள்கைகளைத் தூக்கி நிற்பதாகவே இருக்கும். இதனை இளந்தலைமுறையினர் அறிவியல் பூர்வமாகவும் அறிவு ரீதியாகவும் சிந்தித்து முன்னெடுக்க முன்வரல் வேண்டும்.

எமது கட்சியின் நிலைப்பாடு சுயநிர்ணைய உரிமை அடிப்படையில் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் வடக்குகிழக்கு இணைக்கப்பட்ட சுயாட்சியேயாகும். இவ்வாறான சுயாட்சித் தீர்வில் முஸ்லீம் மக்களும் மலையகத்தமிழ் மக்களும் சுயாட்சி உள் அலகுகள் மூலம் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.

மேற்கூறிய பிரச்சினைகளைப் போராட்டங்களாக முன்னெடுக்க வேண்டிய கோரிக்கைகளை முன்வைத்தே இம்முறை எமது மே தினக் கூட்டங்களை யாழ்ப்பாணம், அட்டன், கொழும்பு, வவுனியா ஆகிய நான்கு இடங்களில் நடாத்துகின்றோம்.

யாழ் நகரில் பொதுக்கூட்டமும் சுன்னாகத்திலிருந்து சைக்கிள் பேரணியும் நடாத்தவுள்ளோம்.

அட்டன் நகரில் மலையக மக்கள் எதிர்நோக்கும் இன வர்க்க அடிப்படையிலான பிரச்சினைகளை கோரிக்கைகளாக வைத்து ஏனைய சில அமைப்புகளுடன் இணைந்து புரட்சிகர ஐக்கிய மேதினமாக நடாத்துகின்றோம்.

மே தினம் உலகத் தொழிலாளர்களின் பேராட்டதினம். இரத்தம் சிந்தி எட்டு மணி நேர வேலையைப் பெற்ற அப் புரட்சிகர நினைவு நாளை வர்க்க இன சாதிய பெண்கள் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்ட தினமாக புரட்சிகர எழுச்சியுடனேயே எமது கட்சி முன்னெடுத்து வந்துள்ளது. இம்மேதினங்களின் ஊடாக உழைக்கும் மக்களை அரசியல் விழிப்புணர்வுக்கும் வெகுஜன அணி திரள்வுகளுக்கும் ஒரணி திரட்ட முடியும் என நம்புகின்றோம்.

22.04.2012

கா.செல்வம் கதிர்காமநாதன்.

வட பிராந்திய செயலாளர்.

இவ்வாறு கடத்தலில் ஈடுபடுவது பாசிசப் போக்கின் வெளிப்பாடாகும்
ஜே.வி.பி.யில் இருந்து வெளியேறித் தனிக்கட்சி அமைப்பதில் ஈடுபட்டிருந்த அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்த பிரேமகுமார் குணரட்ணம், திமுது ஆட்டிகல ஆகிய இருவரும் கடந்த ஆறாம் திகதி இரவு வெவ்வேறு இடங்களில் வைத்துக் கடத்தப்பட்டுக் காணாமல் போயுள்ளனர். இச்சம்பவத்தைப் புதிய- ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சியின் அரசியல் குழு மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அதேவேளை இக்கடத்தலும் காணாமல் போயுள்ளமையும் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனவும் கட்சி சுட்டிக் காட்டுகிறது.

நாட்டில் திட்டமிட்ட ஆட்கடத்தல்களும் காணாமல் போகின்றமையும் நீண்டகாலமாகவே தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிகழ்வுகளாகும். குறிப்பாகப் போர்க்காலங்களிலும் அதன் முடிவுக்குப் பின்பும் எவ்வித குறைவுமின்றி நாடு முழுவதும் குறிப்பாக மாற்றுக் கருத்துக்கள் உடையோர் கடத்தப்படுவதும் காணாமல் போவதும் தொடர்ச்சியாகவே திட்டமிட்ட வகையில் இடம்பெற்று வந்துள்ளன. இவை பற்றிய முறைப்பாடுகளும் கண்டனங்களும் அண்மைய ஜெனிவா மனித உரிமைப் பேரவை வரை சென்று சர்வதேச அளவில் எதிரொலித்து நின்றமையைக் காண முடிந்தது. அத்துடன் இதுவரை கடத்தப்பட்டுக் காணாமல் போனோர் பற்றிய சுயாதீன விசாரணையை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச அரங்கில் வற்புறுத்தப்படுகின்றது. கருத்துச் சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம், அமைப்பு உருவாக்கும் உரிமை என்பன அரசியலமைப்பில் தாராளமாகவே பொறிக்கப்பட்டுள்ளன. அதேவேளை மாற்றுக் கருத்துடையோர் ஒன்றுகூடி புதிய கட்சியாக முன்னிலை சோசலிசக் கட்சியை அமைக்க முயற்சி செய்தபோதே அதன் முன்நிலையாளர்களான பிரமேகுமார் குணரட்ணமும் திமுது ஆட்டிகலவும் கடத்தப்பட்டுக் காணாமல் போய் உள்ளமை அதிர்ச்சிக்கும் கண்டனத்திற்கும் உரியதாகும். ஏற்கனவே இதே அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்த லலித் வீரராஜ், குகன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு நான்கு மாதங்களாகியும் விடுவிக்கப்படவோ தகவல் வெளிப்படுத்தப்படவோ இல்லை. ஜே.வி.யில் இருந்து வெளியேறிய அதிருப்தியாளர்கள் தமக்கென ஒரு புதிய கட்சியை உருவாக்குவது ஜனநாயகத்திற்கு உட்பட்டதும் சட்டபூர்வமானதுமாகும். அதனைத் தடுக்க இவ்வாறு கடத்தலில் ஈடுபடுவது பாசிசப் போக்கின் வெளிப்பாடாகும். ஆதலால் அவர்கள் நால்வரும் உடன் விடுவிக்கப்பட வேண்டும் என்பதையே எமது கட்சி வற்புறுத்துகிறது.

ஊடகங்களுக்கான அறிக்கை

09.04.2012

புதிய- ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி

முப்பரிமாணம்
“காதல் தோல்வி”

காதல் என்று வந்து விட்டால், காதல் தோல்வி என்பது ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல் சாதாரண விடயம். மாத்தளை ராமு வேணியிடம் தோல்வியுற்றுக், காதல் காச்சலில் தவிக்கிறான். ஓழுங்காகச் சாப்பிடுவதும் இல்லை, தூங்குவதும் இல்லை. கொஞ்சமாவது மனதைத் தேற்றிக் கொள்வதற்கு வீட்டின் பொது அறையில் உள்ள டேப் ரெக்கோடரில்

“… பெண்ணைப் படைக்காதே பிரம்மனே

பாவம் ஆண்களே பரிதாபம் நாங்களே

எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம்… “

என்ற பாடல் வரிகளைத் திரும்பத் திரும்ப ரிவைன்ட் செய்து செய்து கேட்டுக் கொண்டிருக்கிறான்.

சம்மாந்துறை சஹீலும் அவன் பங்கிற்குத் தோல்வியைக் கண்டுவிட்டுதான் இருக்கிறான். அவனைக் காதலித்த ரிஸ்னா நேற்றுடன் தன்னை மறந்து விடும்படிச் சொல்லிவிட்டாள். சஹீல் தனது அறையின் கதவைப் பூட்டிக் கொண்டு தனது சீடி பிளேயரின் அருகில் இருந்து கேட்கும் ஒரே பாடல்

“யம்மா யம்மா காதல் பொன்னம்மா

அட என்ன விட்டு போனதென்னம்மா….

அட ஆணோட காதல் கை ரேக போல….”

ஷாலிக்காவிடம் தோற்ற கல்கிஸ்ஸ ரொஷான் பைத்தியக்காரனைப் போல் இருக்கின்றான். ரொஷான் யாரிடமும் போசுவதில்லை. iPodஐக் காதில் போட்டவாறு, யானியின் இசையை அவன் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறான்.  தனிமையுடன் ஏற்படும் குளிரை மேலும் அதிகரித்துக்கொள்ள காரில் ஏசியை நடுங்கும் அளவிற்கு கூட்டி வைத்துக் கொண்டுள்ளான்.

கடிகாரம் உலகத்திற்கு வந்தது என்னவோ நேரம் பார்ப்பதற்கு என்றாலும் இன்று கைக்கடிகாரத்தை அணிபவர்கள் நேரம் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் ஒரு ஃபெஷனையும் எதிர்பார்க்கின்றார்கள். கந்தப்பலையைச் சேர்ந்த சேகர் புதிய ஃபெஷன் கடிகாரம் ஒன்றை வாங்கக் கண்டிக்கு வந்தான். கடையில் இருக்கின்ற அனைத்து வகையிலான கடிகாரத்தையும் பார்த்துவிட்டு கடைசியில் 500 ரூபா பெறுமதியான கடிகாரம் ஒன்றை வாங்கினான்.

கெக்கிராவ சந்தன தான் கொழும்பிற்கு வந்தபோது வேலைக்குச் செல்லும்போது அணிவதற்காகப் புதிய டிசைன் கடிகாரம் ஒன்றைத் தேடினான். சுவிஸ் ரொலெக்சையும் சுவிஸ் ஒமேகாவையும்  தடவிப் பார்த்துக் கொண்டிருந்த அவன் கடைசியாக 1800 ரூபா பெறுமதியான சீன டிஜிட்டல் கடிகாரம் ஒன்றை வாங்கினான்.

தெஹிவலை கோகுலன் கடிகாரம் ஒன்றை வாங்க MC க்குச் சென்றான். கோகுலன் தொடர்ந்து பாவித்தது சுவிஸ் பனேரியா கடிகாரம். இம்முறையும் கோகுலன் அதே பிராண்ட்டில் புதிய ஃபெஷன் கடிகாரத்தை வாங்கினான். அதன் விலை 50,000 ரூபா. அதனைப் பார்த்தவுடன் அவ்வளவு விலையானது எனக் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அந்த பிரான்ட் பற்றித் தெரிந்தவர்களுக்கு மட்டும் அதன் விலையைப் பற்றியும் தெரியும்.

இன்று எது அழகு என்று சொல்லித்தருவது யார் என்று உங்களுக்குத் தெரியும். பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி எவை எல்லாம் அழகிற்குக் கேடானவை என்பதை பட்டியலிட்டு நமது ஊடகங்கள் நாளும் பொழுதும் சொல்லித்தருகின்றன.

அதன் விளைவாகத் தற்கால இளம் பெண்களுக்குத் தொப்பை இருத்தல் அவ்வளவு விருப்பமான விடயமல்ல. உடற் கட்டமைப்பைப் பராமரிக்கத் தொப்பை  இல்லாமல் இருத்தல் வேண்டும்.  எம்பிலிப்பிட்டிய நயனாவிற்கும் செவ்வந்திக்கும் தொப்பை வைத்தல் பெரும் பிரச்சினையாக ஆகிவிட்டது. தொப்பையைக் குறைக்க அவர்கள் முடிவு எடுத்தனர். எனவே ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் அவர்கள், வேலை விட்டுப் போகையில் சற்றுத் தூரமான பாதையினூடாக வீட்டுக்கு நடந்து செல்லத் தீர்மானித்தார்கள். நாள் முழுக்க ஆடைத் தொழிற்சாலையில் உழைத்துச் செத்து வரும் அவர்களுக்கு வழமையை விட ஒரு கிலோமிட்டர் தூரம் நடந்து செல்லுதல் கஷ்டமாகத் தோன்றவில்லை, தொப்பையைக் குறைப்பதற்காக அந்த வேதனையைத் தாங்கிக் கொண்டு தொடர்ந்து நடக்க ஆரம்பித்து விட்டார்கள்.

கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த ரீமா தொப்பையைக் குறைப்பதற்குக் கண்டியில் உள்ள ஜிம் ஒன்றில் 1500 ரூபா மாதக் கட்டணத்திற்கு உடற்பயிற்சி செய்வதற்குச் சேர்ந்தாள். என்றாலும் ரீமாவுக்குத் தொழில் காரணமாக ஜிம்முக்கு போக முடியாமலுள்ளது. தொழிலை முடித்து விட்டு ஜிம்முக்கு செல்வதற்கு ரீமா ஒவ்வாரு நாளும் பெரும் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஏனைய எல்லாருக்கும் போலவே லக்கிகாவுக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது. என்றாலும் கஷ்டப்பட்டு தொப்பையைக் குறைப்பதற்கு அவளுக்கு இஷ்டம் இல்லை. எனவே அவள் கஷ்டமின்றி வயிற்றைக் குறைப்பது தொடர்பாக யோசித்தாள். அவளின் நன்பி மெக்டொனல்டில் வைத்து அன்றொரு நாள் “பெட் பேர்ன்ட்” என்ற புதிய சிகிச்சையைக் பற்றி கூறிய செய்தி ஞாபகத்திற்கு வந்தது. அச் செய்திக்கு அமைய அவள் மாதம் 50,000 ரூபா செலுத்தி பெட் பேர்ன்ட் நிலையத்துக்கு செல்கிறாள்.

ஓரே மாதிரி ஒரே வடிவில்…

நவீன், ரொஷான், வினோதன் மூவரும் இன்று Galleface வந்துள்ளனர்.

நவீன் மொன்டேரோ ஒன்றில் வந்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் விந்தியா வருவதாகச் சொல்லியிருந்தாள். நவீன் அவள் வரும் வரை கடற்கரைப் பகுதிக்கு சென்றான்.

ரொஷான் மோட்டர் பைக் ஒன்றில் வந்தான். நிவேதா ‘ஷோர்ட் லீவ்’ எடுத்துக்கொண்டு ரொஷானைச் சந்திக்க வருவதாகக் கூறியபடியால் ரொஷான் காத்துக் கொண்டிருக்கின்றான்.

வினோதன் பேரூந்தில் வந்தான். வனிதா வரும் வரை வினோதன் பார்த்துக் கொண்டிருந்தான்.

மூவரும் கடற்கரையோரம் வேவ்வேறு இடங்களிலே ஒருவருக்கு ஒருவரைத் தெரியாது நின்று கொண்டிருந்தாலும், மூவரும் கோல்பேஸ் வந்த நோக்கம் ஒன்று. ஆனால் மூவரையும் தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஒரு ஒற்றுமை தென்பட்டது. அந்த ஒற்றுமை, அவர்கள் மூவரும் நீல நிற டெனிம் காற்சட்டையை அணிந்திருந்தார்கள்.

நவீனின் டெனிம் “லிவைஸ்”. சென்ற வாரம் வாங்கியது. புதிதாக வந்த டிசைன். ஆதலால் நவீன் கண்டவுடன் வாங்கிவிட்டான். அதன் விலை 16,000 ரூபாய்.

ரொஷான் தன் டெனிமை நோ லிமிட்டில் வாங்கினான். தொடர்ந்து ஒரு டெனிமை 2 வருடங்கள் பாவித்து நிறம் மாறியபடியால், இம் முறைச் சம்பளத்திற்கு 2000 ரூபாய்க்கு அந்த டெனிமை வாங்கினான்.

வினோதன் டெனிம் வாங்கியது மதிவெல பாதை ஓரத்தில் திடீரெனப் போடப்பட்ட சேல் ஒன்றில்.  அந்த இடத்தில் குறைந்த விலைக்கு நிறைய டெனிம்கள் விற்கப்பட்டன. ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கழிக்கப்பட்ட ஆடைகளே அவ்விடத்தில் போடப்பட்டிருந்தன. வினோதன் அவற்றில் தேடித் தேடி 500 ரூபாய்க்கு ஒரு டெனிமை வாங்கினான்.

மூன்று வகையான விலைகளைக் கொண்டிருந்த போதும் மூன்று டெனிம்களினதும் நிறமும் தோற்றமும் ஒன்றுதான்.

புதியபூமி (மார்ச் 2012)

ஜெனீவா தீர்மானம் : அமெரிக்காவின் உள்நோக்கத்தினை முறியடிக்க இலங்கைக்கு உள்ள ஒரே வழி எது?
ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத இராணுவ ஒடுக்குமுறையினதும் யுத்த வெற்றி என்ற மமதையினதும் எதிர்விளைவேயாகும். இத்தீர்மானமும் அதன் மீதான விவாதங்களும் சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்திற்குத் தரக்குறைவையும் தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை இலங்கை மீது தனது ஆதிக்கப்பிடியை ஐ.நா. மூலம் வலுப்படுத்திக் கொள்வதற்குக் காத்திருந்த அமெரிக்காவிற்கு ஜெனிவாத் தீர்மானம் தகுந்த சந்தர்ப்பத்தையும் வழங்கியுள்ளது. இவற்றுக்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியும் அவரது தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமுமே ஏற்றுக் கொள்ளவேண்டும்.

ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படுவதற்கு அடிப்படையாக அமைந்திருந்தது தேசிய இனப் பிரச்சினையின் தீர்வின்மையும் அதன் காரணமான கொடிய யுத்த முன்னெடுப்புகளுமாகும். அதனாலேயே போர்க்குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றன. இன்று யுத்தம் முடிவுற்று மூன்று வருடங்கள் கடந்த பின்பும் அவற்றின் தொடர்ச்சியாக அரசியல் தீர்வு நிராகரிப்பும், ஜனநாயக மறுப்புகளும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்று வருகின்றன. இச்சூழலிலேயே ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை மூலம் இலங்கை விடயத்தை ஐ.நா தனது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வந்து மனித உரிமைகள் பேரவைக்குக் கையளித்தது.

இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய அமெரிக்கா ஜெனிவாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியதன் மூலம் தனது ஆதிக்கப் பிடிக்குள் இலங்கையை இறுக்கிக் கொள்ள முனைந்து நிற்கின்றது. முன்பு நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பின்னால் இருந்து கொண்டு இலங்கை மீதான தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த அமெரிக்கா முயன்று அதில் வெற்றி பெற இயலவில்லை. ஆனால் இப்போது ஐ.நா.மூலம் தனது தலையீட்டை மீளக் கொண்டு வந்துள்ளது.

இது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்த்து மக்களிடையே நல்லெண்ணத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் அல்ல. அல்லது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுத்துக் கொடுக்கும் வழியிலும் அல்ல. கேந்திர முக்கியத்துவம் மிக்க இலங்கையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பூகோள ஆதிக்க நோக்கின் அடிப்படையிலானதேயாகும்.

நாடுகளின் மீது தலையீடுகளையும் ஊடுருவல்களையும் செய்வதற்கு அமெரிக்கா பின்பற்றி வந்த உள்நாட்டு முரண்பாடுகளைப் பயன்படுத்துவது என்பதன் அடிப்படையிலேயே ஜெனிவாத் தீர்மானத்தையும் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது. அதனைத் தடுத்து நிறுத்தி அமெரிக்காவின் உள்நோக்கத்தை முறியடிப்பதற்கு உள்ள ஒரே வழி தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வைத் தாமதமின்றிக் கொண்டு வருவதாகும். அதேபோன்று நாட்டில் மறுக்கப்படும் ஜனநாயக செயற்பாடுகளுக்கும் தொடரப்படும் மனித உரிமை மீறல்களுக்கும் உடன் முற்றுப் புள்ளி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். ஆனால் ஜனாதிபதியும் அவரது தலைமையிலான அரசாங்கமும் எந்தளவிற்கு தமது பேரினவாத ஒடுக்குமுறை நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வந்து ஆக்கபூர்வமானதும் தூரநோக்கிலுமான செயற்பாட்டிற்கு முன்வருவார்கள் என்பதே பிரச்சினையாகும்.

புதிய-ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சியின் ஊடகங்களுக்கான அறிக்கை

25.03.2012

வெகுஜன எழுச்சியும் போராட்டங்களும் புதிய திசையில் பயணிக்க வேண்டும்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் பூதாகாரமாகி வருகின்றன அவற்றின் வெளிப்பாடாகவே அண்மையில் டீசல், பெற்றோல், மண்ணெண்ணெயின் விலைகளும் மின்சாரக்கட்டணமும் உயர்த்தப்பட்டன. அதன்மூலம் சகல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் போக்குவரத்துக் கட்டணங்களும் தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன. தொடர்ந்து விலை அதிகரிப்புக்களும் கட்டண உயர்வுகளும் இடம்பெறப்போகின்றன. இவை இன மொழி மத பேதமின்றி அனைத்து உழைப்புக்கும் மக்களுக்கு எதிரானவைகளேயாகும் தமது ஆட்சி அதிகாரத்தை தேவைக்காக மக்களை இனப்பகை மூலம் பிரித்து வைத்தும் பொருளாதார நெருக்கடிகளை எல்லா மக்களின் மீதும் சுமத்தியிருக்கின்றனர். இதனால் தெற்கிலே உழழைக்கும் சிங்கள மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். பறிக்கப்படும் தமது வாழ்வாதாரங்களுக்கும்  உரிமைகளுக்கும் போராட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கு எதிராக நீட்டப்பட்டுவந்த துப்பாக்கிகள் இப்போது தெற்கின் மக்களுக்கு எதிராகத் திருப்பப்பட்டுள்ளன. அதன் மூலம் மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் கொடுர அடக்குமுறை முகம் சிங்கள மக்கள் மத்தியில் அம்பலமாக ஆரம்பித்துள்ளது. கடந்த வருட நடுப்பகுதியில் கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒரு இளம் ஊழியர் போலீஸ் துப்பாக்கிக்கு பலியானார் இப்போது மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பை எதிர்த்த சிலாபம் மீனவர்களுக்கு எதிராகத் திருப்பப்பட்டது துப்பாக்கிக் குண்டினால் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஒரு நடுத்தர வயதுடைய  மீனவர் கொல்லப்பட்டிருக்கின்றார். மூன்று வருடங்களுக்கு முன்பு இறுதி யுத்தத்தின் போது பல ஆயிரம் தமிழ் மக்கள் இதே துப்பாக்கிகள் மூலமே வகை தொகை இன்றிக் கொல்லப்பட்டனர். அதன் வலிகளும் வேதனைகளும் எத்தகையவை என்பதை இன்று சிங்கள உழைக்கும் மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். இவ்வேளை பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுத்து நிற்கும் தமிழ் முஸ்லீம் மலையக மக்கள் சிங்கள உழைக்கும் மக்கள் முன்னெடுத்து வரும் வெகுஜெனப் போராட்டங்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து ஒன்றினைந்து போராட முன்வரல் வேண்டும் . சிங்கள உழைக்கும் மக்களுக்குத் தமிழர் தரப்பில் இருந்து நீட்டப்படும் நேசக்கரங்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளைச் சிங்கள மக்கள் மத்திக்கும் கொண்டு சென்று சேர்க்கக் கூடிய புதிய அரசியல் சூழலைத் தோற்றுவிக்கும்.  அதனால் இதுவரை காலத்தில் இரு புறத்திலும் முன்னெடுக்கப்பட்டு வந்த இனப்பகை அரசியலுக்குப் பதிலாக உழைக்கும் வர்க்க மக்களின் ஜக்கியத்தின் ஊடாக மாற்று வெகுஜென அரசியல் பாதையும் பயணமும்  திறக்கப்படமுடியும்.

இதுவரை காலமும் தமிழ் மக்களின் நீதியான கோரிக்கைகளுக்கு நியாயமான அரசியல் தீர்வை வழங்க மறுத்து பேரினவாத ஒடுக்குமுறையை யுத்தமாக தெற்கின் ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வந்தனர். சிங்கள உழைக்கும் மக்களுக்கு அவ்யுத்தத்தைக் காட்டி அவர்களது பொருளாதார வாழ்வாதாரக் கோரிக்கைகளை மறுத்து வந்த சிங்கள மேட்டுக்குடி முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இப்போது அம்மக்களுக்குப் பதில் கூற முடியாதுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாகப் பின்பற்றப்பட்டு வந்த தாராளமயம் தனியார் மயம் உலக மயமாதல் என்பனவற்றில் தவறான பொருளாதாரஅரசியல் கொள்கைகளின் மொத்த விளைவுகளே இன்றைய பொருளாதார நெருக்கடிகளும் விலை உயர்வுகளும் வாழ்க்கை செலவு அதிகரிப்புக்களுமாகும். வலுப்பெற்று வந்த நெருக்கடிகளை திரையிட்டு மறைத்து சிங்கள உழைக்கும்  மக்களைத் திசை திருப்பி வைத்திருக்கவே அரசியல் தீர்வை மறுத்து கொடூரயுத்தம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. பயங்கரவாதம் என்பதை வளர்த்தவர்கள் பேரினவாத ஆட்சியாளர்களே. அதனை அழித்ததாக கூறிப் பெருமை பேசி கொண்டவர்களும் அவர்களே. யுத்தம் முடிவுற்று மூன்று வருடங்கள் ஆகப்போகும் இவ் வேளையில் பொருளாதார நெருக்கடிகள் மக்களின் தலைகளின் மீது மேன்மேலும் சுமத்தப்படுகின்றன. இது ஏன் என்பதற்கு ஆளும் தரப்பால் உரிய பதில் கூற முடியாத நிலையிலேயே மக்கள் மீது துப்பாக்கி ரவைகளை ஏவி வருகின்றனர். ஜனநாயக மறுப்பு,மனித உரிமை மீறல்கள் போன்ற அடக்குமுறைகள் மக்கள் மீது மேற்கொள்ளப்படுகின்றன.

ஒரு புறத்தில் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு முன்வைக்கக்க முடியாத பேரினவாத நிலைப்பாட்டில் ஜனாதிபதியும் அரசாங்கமும் உள்ளனர். அத்தகைய நிலையிலே தற்போது ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஜ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் முழுப்பூசனிக்காயை இலைச்சோற்றில் மறைக்க அரசாங்கம் பெருமெடுப்பில் முயற்சி செய்து வருகிறது. புத்த பெருமானின் போதனைகளையும் பௌத்த தர்மத்தையும் தலைமேல் தூக்கி வைத்து ஆட்சி நடாத்தும் ஜனாதிபதி தலைமையிலான இன்றைய அரசாங்கம் போர்க்குற்றம் மனித உரிமை மீறல்கள் இடம் பெறவே இல்லையென வாதிட்டு நிற்பதானது எத்தகைய தர்மம் என்று புரியாது உள்ளது. இது நீதி நியாயம் ஜனநாயகம் மனித உரிமைகள் என்பனவற்றை மதிக்கும் சாதாரண சிங்கள உழைக்கும் மக்களை உலகஅரங்கில் அவமானப்படுத்தித் தலைகுனிய வைக்கும் செயல் முறையேயாகும்.

மறுபுறத்தில் நிறைவேற்று அதிகாரம்,குடும்ப சகோதரர் ஆட்சி,ஊழல்,ஆடம்பரம்,அதிகார துஸ்பிரயோகம் போன்றவற்றால் நாட்டு மக்களே சூறையாடப்படுகின்றனர் இவற்றையிட்டுக் கேள்வி எழுப்பி வீதிக்கு வரும் மக்களுக்கு எதிராகத் துப்பாக்கிகள் நீட்டப்படுகின்றன; கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்படுகின்றன. இந்நிலையில் மக்களுக்கு தெளிவானதும், தூரநோக்குடனான மக்கள் சார்பு மாற்று அரசியல் பாதை தேவைப்படுகிறது. அதனை விடுத்து தெற்கிலே மற்றுமொரு பேரினவாதக் கட்சியான ஜக்கிய தேசியக்கட்சியையும் வடக்கு கிழக்கிலே பழைமைவாதக் கொள்கை மாறாத தமிழ் குறுந்தேசியவாதத் தலைமைகளையும் மீண்டும் ஆட்சிக்கும் பதவிகளுக்கும் பாராளுமன்றத்திற்கும் கொண்டு வருவதால் எந்தப்பலனும் ஏற்படப்போவதில்லை. இது நாறிப்போன பழைய சோற்றைக் கொதிப்பிப்பது அல்லது அரைத்த மாவை மீண்டும் அரைப்பது போன்ற பிற்போக்கு வாக்கு வங்கி அரசியலின் நீடிப்பாகவே அமைந்து கொள்ளும்.

எனவே தெற்கின் உழைக்கும் சிங்கள மக்களும் வடக்குகிழக்கு மலையகத்தின் உழைக்கும் மக்களும் ஒருவரது அரசியல் கோரிக்கையை மற்றவர் ஆதரித்து நிற்கும் மாற்று கொள்கையின் ஊடான வெகுஜன எழுச்சியும் போராட்டங்கள் இன்றைய சூழலில் அவசியமானதாகும்.

சி.கா.செந்திவேல்

(யாழ்நகரில் 24.02.2012 அன்று புதிய-ஜனநாயக இளைஞர் முன்னணியின் வடபிராந்தியக் குழு ஏற்பாடு செய்த அரசியல் கலந்துரையாடலில் ஆற்றப்பட்ட உரையின் சுருக்கவடிவம்)

அனைத்து உழைக்கும் மக்களும் ஐக்கியப்பட்டு வீதியில் இறங்கிப் போராடுவதே ஒரே மார்க்கமாகும்
ஏலவே வடக்குக் கிழக்கு மக்களை யுத்தத்தால் கொன்றொழித்து, வந்த பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இப்போது நாட்டின் ஏகப் பெரும்பான்மையான அனைத்துத் தொழிலாளர்கள் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்களை விலை உயர்வுகளால் சாகடிக்க ஆரம்பித்துள்ளது. இவ் இடத்தில் இன, மொழி, மதப் பேதங்களுக்க அப்பால் அனைத்து உழைக்கும் மக்களும் ஐக்கியப்பட்டு வீதியில் இறங்கிப் போராடுவதே ஒரே மார்க்கமாகும்.

அரசாங்கம் கொண்டுவந்துள்ள மிக மோசமான எரிபொருள் விலை அதிகாரிப்பானது நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களது வயிறுகளில் ஓங்கி அடித்த செயலாகும். ஜனநாயக தொழிற்சங்க மனித உரிமைகளை மறுத்து ஃபாசிசப் பாதையில் பயணித்து வரும் மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையின் தோல்வியே எரிபொருள் விலையேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே விலை உயர்வுகளால் வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாது தத்தளித்து வரும் உழைக்கும் மக்களான தொழிலாளர்கள் விவசாயிகள் மீனவர்கள் மற்றும் அரசாங்க தனியார் துறை ஊழியர்கள் மேலும் அதிகரித்த வாழ்க்கை நெருக்கடிகளுக்குள் அமிழ்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அனைத்து உழைக்கும் மக்களையும் வாட்டி வதைக்கும் எரிபொருள் விலை அதிகரிப்பை ஏற்படுத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கையை எமது புதிய-ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளை இவ்விலை உயர்வுக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை என்பதையும், அவ்வாறான மக்கள் போராட்டங்களை எமது கட்சி ஆதரித்து நிற்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்கள் மீதான சுமைகள் தாங்க முடியாதவாறு ஏற்றப்பட்டன. குறிப்பாக மூன்று வீத நாணயப் பெறுமதிக் குறைப்புப் பொருட்களின் மீதான விலைகளை அதிகரிக்கச் செய்து கொண்டன. சம்பள உயர்வு மறுக்கப்பட்டு விலை உயர்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் பெற்றோல், டீசல், மண்ணெண்ணை ஆகியவற்றின் விலைகளை முறையே ரூபா 12, ரூபா 31, ரூபா 35 என்பனவற்றால் உயர்த்தியுள்ளமை சகல நிலைகளிலும் மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள நேரடித் தாக்குதலாகும். தனியார் போக்குவரத்துத் துறையினர் நடாத்திய ஒரு நாள் பணிப் புறக்கணிப்பு காரணமாக இருபது வீத கட்டண அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் அவதிப்படும் மக்களுக்கு இக்கட்டண அதிகரிப்புப் பெரும் சுமையாகியுள்ளது. அவ்வாறு டீசல் விலை உயர்வானது சகல பொருட்களுக்கும் விலை அதிகரிப்பை இயல்பாகவே கொண்டு வந்துவிட்டுள்ளது. அதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விலைகள் மேலும் உயர்த்தப்படும். அதேபோன்று மண்ணெண்ணைக்கான விலை அதிகரிப்பு மிகக் குறைந்த வாழ்க்கைத் தரத்தில் வாழ்ந்து வரும் கிராமப்புற விவசாயிகள் மீனவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோரைக் கடுமையாகப் பாதித்துள்ளன. இதுவரை காலமும் பேரினவாதத்தினால் மறைக்கப்பட்டு வந்த பொருளாதார நெருக்கடி இப்போது முழு வெளிச்சத்திற்கு வந்துள்ளதுடன் ஆளும் வர்க்கத்தின் சுயரூபத்தையும் அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளது. ஏலவே வடக்குக் கிழக்கு மக்களை யுத்தத்தால் கொன்றொழித்து, வந்த பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இப்போது நாட்டின் ஏகப் பெரும்பான்மையான அனைத்துத் தொழிலாளர்கள் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்களை விலை உயர்வுகளால் சாகடிக்க ஆரம்பித்துள்ளது. இவ் இடத்தில் இன, மொழி, மதப் பேதங்களுக்க அப்பால் அனைத்து உழைக்கும் மக்களும் ஐக்கியப்பட்டு வீதியில் இறங்கிப் போராடுவதே ஒரே மார்க்கமாகும். இதனைத் தவிர வேறு வழி இல்லை என்பதை எமது கட்சி சுட்டிக்காட்டுவதுடன், அத்தகைய வெகுஜனப் போராட்டங்களை ஆதரித்து அவற்றில் கலந்து கொள்ளவும் செய்கிறது.

ஊடகங்களுக்கான அறிக்கை

14.02.2012

புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிச கட்சி

ஒரு பயணத்தின் கதை
அமெரிக்காவுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அமெரிக்கச் சனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையிலிருந்து அழைப்பு வந்ததாக நமக்குச் சொல்லப்பட்டது. பின்பு அமெரிக்க அரசுத் திணைக்களத்திலிருந்து அழைப்பு வந்ததாகச் சொல்லப்பட்டது. இரா. சம்பந்தனைத் தலைவராகக் கொண்ட நால்வர் குழு ஒக்ற்றோபர் 25ம் திகதி விமானமேறியது. இது நல்ல வாய்ப்பு எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் ஆரவாரித்தன. புலிகளின் தோல்வியை அடுத்து மகிந்த சிந்தனை ஆட்சியின் பேரினவாதச் செய்நிரல் துரிதமாக முன்னெடுக்கப்படும் ஒரு சூழலிற், கூட்டமைப்பின் அரசியல் இயலாமையின் அரசியலாகவே இருந்துவருகிறது. வடக்கு-கிழக்கில் வாக்குக்கள் பெறும் அலுவலைத் தவிர வேறெதையுமே கவனியாத கூட்டமைப்பு, இந்திய அழுத்தத்தின் கீழ் அரசாங்கத்துடன் பதினொரு முறை பேசியும் அரசாங்கத் தரப்பிலிருந்து எதையுமே வெல்லத் தவறிவிட்டது. இந் நிலையில் அமெரிக்காவின் ‘அழைப்பு’ நீரில் மூழ்குகிறவனின் கைக்கு எட்டிய ஒரு கயிறாகத் தெரிந்தது.

அந்த அழைப்புப் பற்றி ஐயங்கள் சில இப்போது எழுந்துள்ளன. கூட்டமைப்பினருக்கான அமெரிக்க அரசுத் திணைக்கள அழைப்பு எழுத்தில் வந்ததா? வந்திருப்பின், அதையிட்டுக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரிடம் இலங்கை அரசாங்கம் ஒரு விளக்கத்தைக் கேட்டுப் பெற்றிருக்கும்;. அப்படி நடந்ததற்கு ஒரு ஆதாரமுமில்லை. வேறு வகையில் அழைப்பு வந்திருந்தால், எவர் எந்த அடிப்படையில் அழைத்தார் என்று தமிழ் மக்களுக்கு ஆதாரங்களுடன் கூறுவதற்குக் கூட்டமைப்பினருக்கு ஒரு கடப்பாடுண்டு. நமக்குப் பலருங் கூறியதற்கு மாறாகக், கூட்டமைப்பினருடன் அரசுத் திணைக்கள அலுவலர்களின் சந்திப்புக்கு அரசியல் முக்கியத்துவம் எதுவும் இல்லையெனவும் அமெரிக்க அரசுத் திணைக்களத்தினரைச் சந்திக்க எவருக்கும் உள்ள உரிமையையே கூட்டமைப்பினர் பயன்படுத்தியதாகவும் அமெரிக்க அரசுத் திணைக்களம் கூறியது.

சந்திப்பிற்குப் பின்பு, கூட்டறிக்கையோ அதிகாரபூர்வமான அல்லது தனிப்பட்ட முறையிலான படம் எதுவும் எடுக்கப்படவில்லை. அமெரிக்க அரசுச் செயலாளர் திருமதி கிளின்ற்றனைச் சந்திப்பார்களெனவும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனைச் சந்திப்பார்களெனவும் அவர்கள் புறப்படு முன் நமக்குச் சொன்னவர்கள், எந்த அடிப்படையில் அப்படிச் சொன்னார்களென்று நமக்கு இதுவரை சொல்லப்படவில்லை.

போய்வந்த பின்பு அழைப்பைப் பற்றியும் அங்கு பேசித் தீர்த்தவை பற்றியும் அமர்க்களப்படுத்த முன், அந்த அழைப்பு மடலின் பிரதியை, எல்லாத் தமிழ் மக்களும் இல்லாவிட்டாலும், தங்கள் ஆதரவாளர்க ளாவது கண்டு மகிழ ஊடகங்கள் மூலம் வழி செய்வார்களா?

அமெரிக்க ‘அழைப்பும்’ பயணமும் அரசியற் பெறுமானமற்றவை என இப்போது தெளிவாகிவிட்டாலும் சிங்களப் பேரினவாதிகள் அதில் ஒரு விதமான ஆதாயம் தேடுகின்றனர். கூட்டமைப்பினர் இன்னொரு விதமான ஆதாயம் தேடுகின்றனர். ஆனால், தமிழரசுக் கட்சியும் பின்பு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எப்போதும் செய்துவந்துள்ளது போல, அழைப்யையும் சந்திப்பின் விளைவுகளையும் பற்றிய தகவல்கள் என்றென்றும் மூடுமந்திரமாகவே வைக்கப்பட்டிருக்;கும் என்பதில் ஐயமில்லை.

அமெரிக்கா உண்மையாகவே கூட்டமைப்பினருக்கு முக்கித்துவம் கொடுத்திருந்தாலும், தமிழ் மக்கள் அதையிட்டு மகிழவியலாது. கூட்டமைப்பினருக்குக் கிடைத்துவந்த இந்திய அழைப்புக்களைப் போல அமெரிக்க அழைப்பெதுவும் வருமாயின், அதன் உள்நோக்கங்கள் என்னவாக இருக்கலாம் எனத் தமிழ் மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். அமெரிக்கா என்றுமே தமிழ் மக்களின் நண்பனோ இரட்சகனோ அல்ல. இந்தியாவிடம் முறையிட்டு முறையிட்டுக் களைத்த நிலையில் அமெரிக்காவுக்கு போய் வந்ததன் மூலம் தமிழ் மக்களை மேலுஞ் சில காலம் ஏமாற்றக் கூட்டமைப்பினருக்கு ஒரு வாய்ப்பக் கிட்டியுள்ளது. அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த மேட்டுக் குடிகள் அதற்கு உதவியுள்ளனர். அது தான் இப் பணயத்தின் கதை.

தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற வகையில், தம்மை மக்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும்,  கூட்டமைப்பினருக்குச் சில கடமைகள் உள்ளன: இன்னமும் முகாங்களில் வாழ்வோரின் நிலை, மீளக் குடியமர்த்தப்பட்டோரின் நிலை, இந்திய மீன்பிடி இழுவைப்படகுகளின் பாதிப்பு, தமிழ் மீனவரின் மீன்பிடிப்பு உரிமை மறுப்பு, சம்பூர் நிலப்பறிப்பால் பாதிக்கப்பட்டேரின் நிலை, முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியேறுவதற்கான உரிமை மறுப்பு என்பன போன்று மக்கள் பிரச்சனைகள் பல அவர்களின் கவனிப்பை வேண்டி அலறுகின்றன. கவனிப்பார்களா?

பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்களுடைய நிலைமைகளைக் கேட்டறிய மனம் வராதவர்களுக்கு அம் மக்கள் சார்பாக எவருடனும் பேசுவதற்கு என்ன விதமான தார்மிக உரிமை உண்டு என்பதைத் தமிழ் மக்கள் அவர்களிடம் உரக்கக் கேட்க வேண்டும்.

ஆசிரியர் தலையங்கம், செம்பதாகை இதழ் 11