Articles tagged with: மறுபக்கம்
அரசியல், மறுபக்கம் »
மக்கள் வாழ்வதற்கு உறுதி பூண்டால்
ஊழ் சாதகமாக எதிர்வினையாற்ற விதிக்கப்பட்டதாகும்,
இரவு கலைவதற்கு விதிக்கப்பட்டதாகும்,
விலங்குகள் உடைக்கப்படுவது திண்ணம்.
வாழ்வின் மீதான நேசத்தைப் பற்றிக்கொள்ளாதவன்,
அதன் வளிமண்டலத்தில் ஆவியாகி இல்லாது போவான்.
இக் கவிதை அபு அல்-கஸிம் அல்-ஷமி என்ற, இருபத்தைந்து வயதில் இறந்த ஒரு துனீசியக் கவிஞனால் எழுதப்பட்டது. துனீசியாவின் தேசிய கீதத்தின் இறுதி இரண்டு செய்யுள்களும் அல்-ஷமி எழுதியவை. அல்-ஷமிக்கு அதினும் புகழ் சேர்க்குமாறு, 80 ஆண்டுகள் முன்னர் பிரெஞ்சுக் கொலனி ஆட்சியாளர்கட்கு எதிரான போராட்டத்துக்கு உந்துதலளித்த மேற்குறிப்பிட்ட கவிதை, இப்போது துனீசியாவின் வீதிகளில் மட்டுமன்றி எகிப்தின் வீதிகளிலும் பாடப்படுகிறது. அதை மக்கள் எழுச்சியின் தீச்சுவாலை என்று சில அவதானிகள் குறிப்பிட்டதையும் வாசித்திருக்கிறேன்.
துனீசியாவில் தொற்றிய ஒரு தீப்பொறி இப்போது துனீசியாவைக் கடந்து வெகு தொலைவுகட்கும் பரவியுள்ள ஒரு காட்டுத் தீ போல் ஒளிர்கிறது. அரபு உலகின் ஒவ்வொரு சர்வாதிகாரியையும் குலை நடுங்கவைக்கும் அளவுக்கு …

