Home » Archive

Articles tagged with: புதிய பூமி

அரசியல், சமூகம், சிறப்பு »

[23 Aug 2010 | No Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 507]
தமிழ்த் தேசியம்: உடைக்கப்பட வேண்டியதும் உருவாக்கப்பட வேண்டியதும்

உடைக்கப்பட வேண்டிய பிற்போக்குத் தமிழ்த் தேசியம்

நிலவுடைமை வழிவந்த மேட்டுக்குடி ஆதிக்கக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு அனைத்துத் தளங்களிலும் மிக இறுக்கமான பிற்போக்குத் தனங்களைக் கொண்டிருப்பது.

வெற்று இன, மொழிப் பெருமை பேசிப் பழைமைவாதத்தினுள் உழன்று உழைக்கும் தமிழ் மக்களை இன மொழி உணர்வு மாயைக்குள் அமிழ்த்தி வருவது.

வர்க்க அடிப்படையிலான உழைப்புச் சுரண்டலை நடைமுறையாகக் கொண்டு உழைக்கும் தமிழ் மக்களைப் பன்முக வழிகளில் சுரண்டுவதைப் பாதுகாத்து வருவது.