Home » Archive

Articles tagged with: க. கைலாசபதி

இலக்கியம், திறனாய்வு »

[10 Nov 2009 | No Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 172]
படைப்பிலக்கியத்திற் கொள்கையும் நடைமுறையும்  – க. கைலாசபதி

எண்ணற்ற வடிவங்களிலும் உருவங்களிலும் ஆராய்ச்சிக்கு விரோதமான கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாக எமது இலக்கிய உலகிலே தனியாட்சி செய்து வந்திருக்கின்றன. இவற்றை அறவே அகற்றிப் புறநிலை உலகத்தின் விதிகளுடன் இசைவுடைய கருத்துக்களை வளர்த்தல் வேண்டும். இவ்வாறு வளர்த்தல் செயலாதலின், செய்கை இன்றியமையாததாகிறது. விஷயங்களின் அடிமுடி தேடிப் பெறும் அறிவு கேவலம் ‘ஞான’மாக மட்டுமன்றி ‘உலகினை மாற்றவும்’ ஊக்கத்துடன் உதவ வேண்டும். அது மட்டுமல்ல. நாம் ஆர்வத்துடன் தேடிக்கொள்ளும் அறிவு சரியானதா அன்றித் தவறானதா என்பதை நிச்சயிக்கவும் நடைமுறையே தலை சிறந்த மார்க்கமாகும். ஏனெனில் சமுதாய நடைமுறையில் பிரயோகிக்கும் போது எவை வெற்றி பெறுகின்றனவோ அவை சரியானவை என்று பொதுவாகக் கூறலாம். எவை தோல்வியடைகின்றனவோ அவை தவறானவை என்பதிலும் தப்பில்லை. இயற்கையை எதிர்த்துப் போராடி அதனை வென்றடக்குவதிலேயே இது சிறப்பாகப் பொருந்துவதாயினும் சமுதாய இயக்கங்கட்கும் ஏற்புடையதே.
ஆனால் இயற்கையுடன் நடத்தும் போராட்டத்திலும் …