Articles tagged with: தமிழகம்
அரசியல், ஈழம் »
சீமான் தமிழகத்தின் இளைஞர்களின் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய திரையுலகப் பிரமுகராகத் தன்னை உயர்த்திக் கொள்ள அவருக்கு ஈழத் தமிழரின் கண்ணீர்கைகொடுத்த அளவுக்குத் திரைப்படத் துறையில் அவருடைய ஆற்றல் கைகொடுத்திருக்க வாய்ப்பில்லை.
விடுதலைப் புலிகள் தோல்வியை எதிர்நோக்கிய சூழலில், வன்னியில் தமிழ் மக்கள் அல்லற் பட்டுக் கொண்டிருந்த நிலையில், சீமானின் அரசியல் சினிமா அரங்கேறியது. கருணாநிதியின் நம்பகத்தன்மை குறைந்து போன நிலையில் அவருடைய கூட்டாளிகள் “பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்” என்கிற விதமாக நாடகமாடத் தொடங்கினர். அதன் நோக்கம் வேறொன்றுமல்ல. கருணாநிதியின் அரசியல் எதிரிகள் ஈழத் தமிழரின் அவலத்தால் முழுமையான அரசியல் நன்மை பெற்றுவிடக் கூடாது என்பதுதான்.
ஜெயலலிதாவின் முதலைக் கண்ணீர் பற்றி மக்களுக்கு விளங்கிய அளவுக்கு ராமதாஸ், கோபாலசாமி, திருமாவளவன் வகையறாக்களின் அரசியல் வணிகம் விளங்கவில்லை. விடுதலைப் புலிகளின் புலம்பெயர் நிதி நிறுவனங்களுடனான “கொடுக்கல் வாங்கல்கள்” பற்றி யாராலும் எதையுமே …

