Articles tagged with: சி. சிவசேகரம்
Uncategorized, சிறப்பு »
தமிழின் தனிச் சிறப்புக்கள் எனப் பல்வேறு விடயங்கள் கூறப்படுகின்றன. பிறமொழிகளில் இல்லாத சில ஒலிகள் தமிழில் உண்டு என்பது அவற்றுள் ஒன்று. தமிழிலே தான் அதிகம் எழுத்துக்கள் உள்ளன என்றுஞ் சொல்லியிருக்கிறார்கள். தமிழே உலகின் மூத்த மொழி என்கிறார்கள். தமிழே உலக மொழிகளிற் தூய்மையானது என்றும் அதிற் சேர்க்கப்பட்டுள்ள அயற் சொற்களின் துணையில்லாது தனித்தமிழாற் செயற்பட இயலும் என்று சொல்பவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். வேறு சிலர் இன்னும் ஒரு படி அப்பாற் சென்று உலக மொழிகள் எல்லாமே தமிழிலிருந்து தான் வந்தன என்பதுடன் எல்லா அருஞ் சொற்களுக்கும் தமிழிற் தோற்றுவாய் உண்டு என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கவும் முற்படுவார்கள்.
மேற்கூறியவாறான சிறப்புக்கள் ஒரு மொழியின் பயனுடன் அதிகம் உறவற்றவை. சிறப்புக்கள் எனக் கூறப்படுகிற சில சுமைகளா எனவும் நாங்கள் சிந்திக்க வேண்டும். வாட் பற் புலி (ஸேபர் ட்டுத் …

