Home » Archive

Articles Archive for August 2012

அரசியல், செய்திகள், நிகழ்வுகள் »

[17 Aug 2012 | No Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 260]
சிறைப்படுகொலைகள் இனப்படுகொலைகளே! தடுத்து நிறுத்தும் ஆற்றல் மக்கள் சக்திக்கே உண்டு

இன்றைய அரசாங்கம் பாசிசத்தனமான இனப்படுகொலை செய்யும் ஆட்சியை நடாத்தி வருகின்றது. அண்மையில் வவுனியாச் சிறையிலும் பின் மஹரச் சிறையிலும் தமிழ் அரசியல் கைதிகள் மீது நடாத்தி கொடூரத்தாக்குதலிலேயே நிமலரூபன், டில்ருக்ஷன் ஆகிய இரண்டு பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.  இச்சிறைப் படுகொலைகள் வரலாற்றில் தமிழ் அரசியல் கைதிகள் மீதான மூன்றாவது படுகொலைச் சம்பவமாகும். 1983ல் வெளிக்கடைச் சிறையில் 52 பேரும், 2000ம் ஆண்டில் பண்டாரவளை பிந்துனுவௌ புனர்வாழ்வு தடுப்பு முகாமில் 31 பேரும், இப்போது வவுனியாச் தாக்குதலில் இரண்டு பேரும் இரத்தம் கொட்ட கொட்டத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது இனவெறி கொண்ட பேரினவாத ஆட்சிகளின் கீழான இனப் படுகொலைகளேயாகும். இவற்றை தடுத்து நிறுத்தும் ஆற்றல் மாபெரும் மக்கள் சக்திக்கே உண்டு.  எனவே நீதிகேட்க மக்கள் அணிதிரள வேண்டும். அதுவே அடக்குமுறைகளை எதிர்த்து நிற்பதற்கான ஒரே மார்க்கமாகும்.