Home » Archive

Articles Archive for October 2011

இலக்கியம் »

[18 Oct 2011 | No Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 390]
கசகறணம் :வித்தியாசமான ஒரு நல்ல நாவல்

கசகறணம், விமல் குழந்தைவேல், காலச்சுவடு பதிப்பகம், 2011 யூலை, ப. 248, இந்தியா. 175.00

இது பல வகைகளிலும் வித்தியாசமான ஒரு நாவல். மட்டக்களப்புத் தமிழ் மொழியிலேயே கதை கூறப் பட்டுள்ளுமையும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கலந்து வாழுகிற ஒரு பகுதியான அக்கரைப்பற்றுப் பகுதியின் அன்றாட வாழ்வை ஒரு சந்தையை மையப்படுத்திய ஒரு கதையாகக் கூறுவது ஒரு முக்கியமான பண்பு. தேசிய இனப் பிரச்சனையின் விளைவான இன ஒடுக்கல் விடுதலைப் போராட்டத்துக்கு வழியமைத்த பின்பு, ஒன்றுபட்டு நின்ற இரண்டு சமூகங்களைப் பிளவுபடுத்தி அப் பிரதேசத்தைச் சீரழித்ததைக் கூறுவது இன்னொரு முக்கியமான பண்பு. குறுகிய இனப் பார்வையைத் தாண்டித், தமிழ்-முஸ்லிம் இன முரண்பாடு எவ்வாறு தனிமனித உறவுகளில் தொற்றிப் பகை வடிவம் பெறுகிறது என்பதயும் அவ்வாறு பகையாகாமல் தடுக்கச் செயற்பட்ட நல்ல மனிதர்களையும் நாம் கதையினூடு அறிகிறோம்.
மிக முக்கியமாகக், …