Home » Archive

Articles Archive for April 2011

அரசியல் »

[30 Apr 2011 | No Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 634]
சூடான் பிரிவினையும் தமிழீழக் கனவுகளும்

“மொஸ்கோவில் மழை பெய்தால் கொழும்பில் குடை பிடிப்பார்கள்” என்று தமிழரசுக் கட்சிக்காரர்கள் 1950களில் கம்யூனிஸ்ட்டுக்களைக் கேலி செய்வார்கள். அதில் எவ்வளவு உண்மை இருந்தது என்று சொல்லுவது கடினம். ஆனால் பங்ளாதேஷ் பிரிந்த போதும், கொசொவொ பிரிந்த போதும் இப்போது தென் சூடான் பிரிந்துள்ள போதும், தமிழீழக் குடைகள் அகலமாக விரிகின்றன. அது, பிரிவினை இயல்பாகவே நிகழும் என்ற எதிர்பார்ப்பிலல்ல, அங்கே பிரிவினைக்குக் கை கொடுத்தவர்கள் இங்கேயும் கைகொடுப்பார்கள் என்ற ஒரு நப்பாசையால் மட்டுமே. அதிலும், இன்னமும் மேற்குலகை நம்பிக் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிற புலம்பெயர்ந்த தமிழ்ப் பெருங்குடி மக்களிடம் அவ்விதமான எதிர்பார்ப்பு அதிகம்.
ஆபிரிக்கக் கண்டத்திலும் மத்திய கிழக்கின் அரபுப் பிரதேசங்களிலும் நாடுகள் உருவாக்கப்பட்ட விதமானது, தேசங்களை அடையாளப்படுத்தக் கூடிய இன, மொழி, பண்பாடு, பொருளியல் அடிப்படை என எதையும் சார்ந்ததல்ல. அதை விட, ஒரே இனக்குழுவைச் சேர்ந்த …