Articles Archive for December 2010
அரசியல், நேர்காணல் »
[புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா.
செந்திவேல் அவர்கள் அண்மையில் கனடா, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளுக்குப் பயணம்
மேற்கொண்டு நாடு திரும்பினார். அவரைப் புதிய பூமி இதழின் நிருபர்கள் இருவர்
நேர்கண்டனர். அந் நேர்காணலை இங்கே தருகின்றோம்.]
கேள்வி: நீங்கள் அண்மையில் கனடா, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு பயணம்
செய்து திரும்பியுள்ளீர்கள். அப் பயணத்தின் நோக்கம் என்ன?
பதில்: இப் பயணம் முற்றிலும் அரசியல் பயணமாகவே அமைந்திருந்தது. கனடாவில்
அங்குள்ள தமிழர்கள் மத்தியில் கடந்த இருபது வருடங்களாக அரசியல் சமூக கலை இலக்கிய
அமைப்பாகச் செயற்பட்டு வருவது தேடகம். அதன் முன்னிலைத் தோழர்களில் ஒருவராகச்
செயலாற்றி வந்தவர் பொதுவுடமைவாதியான தோழர் நெல்லியடி சிவம். அவரது மறைவின்
முதலாண்டு நிறைவு தினக் கூட்டத்தில் நினைவுரை நிகழ்த்தத் தேடகம் அமைப்பினர் என்னை
அழைத்திருந்தனர். அத்துடன் அங்கு ஒரு மாத காலம் தங்கியிருந்து அவர்கள் ஒழுங்கு
செய்த பல்வேறு நிகழ்ச்சிகளிற் கலந்துகொள்ளும் வாய்ப்புங் …

