Articles Archive for October 2010
அரசியல் »
“இன்றைய நிலையில் தமிழ் மக்கள் முதன்மைப் படுத்த வேண்டியது அபிவிருத்தி என்பதை மட்டுமேயாகும். அதாவது மீள் குடியேற்றம், புனரமைப்பு, புனர்வாழ்வு என்பன இவ் அபிவிருத்தி என்பதற்குள் அடங்கியுள்ளதால் அதற்கு அப்பால் எதுவும் அவசியமற்றவை என்பதாகும். பேரவலங்கள் பேரழிவுகள் பட்டு நொந்து நொடிந்து போயுள்ள தமிழ் மக்கள் மத்தியில் கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பு அரசியல் நடாத்துவது அர்த்தமற்றதாகும்” என்பதே இவ் அபிவிருத்தி அரசியலை முன் வைப்போரின் தர்க்கமாகும்.
இந்த அபிவிருத்தி அரசியலுக்குப் பின்னால் பல்வேறு மறைக்கப்பட்ட முகங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்து வருகின்றன என்பது ஆழ்ந்து அவதானிக்க வேண்டியதாகும். தமிழ் மக்களைக் குறிவைத்து நிற்கும் அபிவிருத்தி என்ற போர்வைக்குள் அரசாங்கம் கிள்ளிப் போடும் அற்ப உதவிகள், அவற்றை ஏந்தி மக்களுக்குக் கொடுப்பதாகக் கூறும் சலுகை அரசியல்வாதிகள், அந்நிய-உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், மூலதனமிடும் உள்நாட்டு முதலாளித்துவ நிறுவனங்கள், …

