Home » Archive

Articles Archive for November 2009

சிறப்பு »

[28 Nov 2009 | One Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 490]
மலையக சமூக அசைவியக்கமும் பண்பாட்டு நகர்வும்

இலங்கையின் புராதன காலத்திலிருந்தே தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான சமூகப் புலம் பெயர்வுகள் நடந்திருக்கின்றன. இவை வழி வழியாக வந்த நிலமானிய சமூக அமைப்புக்களுடன் ஊடாட்டம் கொண்ட உதிரியான நிகழ்வுகளாக ஆரம்ப காலத்தில் காணப்பட்டன. நிலமானிய அரச பரம்பரையினரின் நலன்களை ஒத்த உற்பத்தி உறவு முறைகளுடன் கட்டமைந்த ஒரு நிகழ்வாய் அமைந்தன. தென்னிந்திய அடையாளங்களோ அல்லது தமக்கென ஒரு அடையாளத்தையோ பேண முடியாத ஒரு புலப்பெயர்வின் தன்மை காணப்பட்டது. பிரித்தானிய ஆட்சியின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் தளத்தில் தமிழகத்திலிருந்து ஏற்பட்ட புலப்பெயர்வு மிக  முக்கிய நிகழ்வாக அமைந்தது.
பிரித்தானிய ஏகாதிபத்திய தேவைகளுக்காக தமிழகத்திலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் இலங்கையின் மலையகப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். இங்கு குடியமர்த்தப்பட்ட மக்கள் புதிய பொருளாதார, சமூக, அரசியல் முறைமை ஒன்றினைக் கட்டியெழுப்பினர். அதாவது தமிழகத்திலிருந்து இங்கு வந்த மக்கள் ஒரு சமூகத் தொகுதியாகவும், …