Home » Archive

Articles in the சமூகம் Category

அரசியல், ஈழம், சமூகம், பெண்ணியம் »

[8 Mar 2011 | One Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 349]
பெருந்தோட்டப் பெண்களும் பெண்ணியக் கருத்துகளும்

மலையக வரலாற்றுப் பார்வையில் சமூக இருப்பிற்காய் வாழ்ந்து மறைந்த பெண்ணியல் சிந்தனையாளர்களில் கோ நடேசய்யரின் பாரியாரான மீனாட்சியம்மாள் என்றென்றும் நன்றியோடு நினைத்துப்பார்க்கப்பட வேண்டியவராவார் சமூக மாற்றத்திற்காய் வர்க்கப் போராட்டத்தின் தத்துவார்த்தங்களுடன் பெண் விடுதலை நோக்கிய நகர்வுகளை மலையகப் பெண்கள் மத்தியில் பரவச் செய்த சாத்வீகப் பெண் போராளி மீனாட்சியம்மாள் என்றால் மிகையாகாது. அவரைத் தொடர்ந்து பல பெண் படைப்பாளிகள் தங்களின் இலக்கியங்களினூடாக பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான பல நகர்வுகளை செய்துள்ளனர் மலையகத்தில் இருந்து பெண்ணியல் சார்ந்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் சில வந்திருந்த போதிலும் ஒரு முழுமையான இலக்கியப் படைப்போ ஆய்வு நூலோ  வெளிவராமை பெரும் குறையாகவே காணப்படுகின்றது. பெண் படைப்பாளிகள் பலர் தங்களின் படைப்புகளில் விடுதலை பேசியதுடன் தங்களின் விடுதலை வேட்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு பெண்ணியல் சிந்தனைகளில் இருந்து நகர்ந்து குடும்பச் சுமை தாங்கும் சுமைதாங்கிகளாகி …