Home » Archive

Articles in the சமூகம் Category

சமூகம், பெண்ணியம் »

[26 Apr 2011 | No Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 150]
சீதனம் பெண் ஒடுக்குமுறையின் சின்னம்

தென்னாசியப் பிராந்தியம் முழுவதையும் எடுத்து நோக்கும் போது ஏனைய ஒடுக்குமுறைகள் போன்று பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது பல்வேறு வடிவங்களில் நீடித்து வருகின்றது.  அதில் ஒன்றே சீதனம் அல்லது வரதட்சனை என்பதாகும். பெண்களுக்கான திருமண நிறைவேற்றத்திற்கு இச் சீதனம் என்பது ஒரு கட்டாய நிபந்தனையாக இருந்து வருகிறது. திருமண பந்தத்தில் ஈடுபடவுள்ள குறித்தபெண்ணுக்கு அவரது வீட்டில் இருந்து பெற்றோர் சகோதரர்கள் என்போர் சம்பந்தப்படப் போகும் ஆணுக்குப் பணம், தங்க நகைகள், நிலம், பாவனைப் பொருட்கள், வாகனங்கள் என்பனவற்றைத் தொகையளவில் அன்பளிப்பாக வழங்கப்படும் நடைமுறையே சீதனம் என்பதாகும்.
இலங்கையில் இச் சீதன முறையானது பரந்தளவில் பல் வேறு அளவுகளில் காணப்படுகிறது. சிங்கள மக்களிடம் குறைந்தளவிலும் தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் வெவ்வேறு அளவுகளிலும் இருந்து வருகிறது. இச் சீதன முறைமையினால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமன்றி அவர்களது பெற்றோர் …