Home » Archive

Articles in the திறனாய்வு Category

இலக்கியம், திறனாய்வு »

[6 Sep 2010 | No Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 589]
கருணாகரனின் கவிதைகள் பொய்யான நம்பிக்கைகளை விதைக்கவில்லை

[பலி ஆடு (கவிதைத் தொகுப்பு), கருணாகரன், வடலி வெளியீடு, 6/13, சுந்தர்தெரு, சென்னை, 600018, 2009 ஏப்ரல், ப 113, இந்திய ரூபா 100.00]
கருணாகரன் ஈழத்தமிழ்க் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகத் தன்னை முப்பது ஆண்டுகட்கு முன்னமே அடையாளங்காட்டிக் கொண்டவர். அவரது உலக நோக்கும் கவிதை பற்றிய பார்வையும் அவரது சமூக, அரசியல், இலக்கிய ஈடுபாடுகளின் விருத்திக்கமைய மாற்றங்கட்கு உட்பட்டு வந்துள்ளன. எனினும் அவருடைய எழுத்தின் முக்கியமான ஒரு பக்கம் ஏதெனின், தமிழ்க் கவிதைக்குரிய மொழி நடையையும் கவிதை கூறும் விதத்தையும் மேலும் உயிரூட்டமானதாக்குதலில் அவர் காட்டி வந்த அக்கறை எனலாம். ஈழத்தமிழ்க் கவிதையில் சோர்வு காணப்படுகிறது என்பது பொதுவான, நியாயமான ஒரு கணிப்பேயாயினும் அந்தச் சோர்வை முறித்துக் கவிதையை முன்கொண்டு செல்ல முயலும் கவிதைகளாக அவரத “பலி ஆடு” தொகுதியிலுள்ள பல கவிதைகளைக் கூறலாம். எனினும் கவிதைகளின் …