Home » Archive

Articles in the கவிதை Category

அறிவித்தல்கள், கவிதை, நிகழ்வுகள் »

[26 Oct 2012 | No Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 164]
முழுமதி நாளின் கவித்துறை நிகழ்வு “பாடிப்பறை” – ஒக்டோபர்

மக்களைப் பாடுதலையும் மக்களைப் பற்றிப் பேசுதலையும் பணியாய்க் கொண்ட கவிதைகளுக்குக் களமாய் அமைந்த “பாடிப்பறை” கவித்துறை நிகழ்வு கடந்த ஓராண்டிற்கும் மேலாக வெற்றிநடை போட்டு வருகின்றது.
அதன் வழியே, இம்மாதமும் எதிர்வரும் போயா விடுமுறையான 29-10-2012 அன்று மாலை 4.30 மணியில் இருந்து 6.30 மணிவரையில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் முதலாவதாக “வதை முகாமிலிருந்து” என்ற மொழிபெயர்ப்புக் கவிதையும் “ஈழத்துக் கவிதைகளில் மலையகக் கவிதைகள்” என்ற தலைப்பிலான ஆய்வுரையும் இடம்பெறவிருக்கின்றன.
அடுத்ததாக, கவிஞர் கிருஷ்ணபிரியன் எழுதிய “வேரின் பிரசவங்கள்” என்ற கவிதைத் தொகுப்பைப்பற்றிய உரையை மு.மயூரன் நிகழ்த்துவார். பாடிப்பறை நிகழ்வின் இறுதிப்பகுதியாக “அந்தரத்தில் இருப்பவர்கள்” எனும் தலைப்பிலான கவியரங்கம் சிவ ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெறும். இக் கவியரங்கத்தில் சை. கிங்ஸ்லி கோமஸ், ஜே. சரண்யா, சு.சிவசக்தி, தி. அனோஜன் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கவிதைகளைப் பகிர்வார்கள்.
சமூக …