Articles in the மறுபக்கம் Category
மறுபக்கம் »
லங்கா-ஈ-நியூஸ் இணையத்தளத்தின் அலுவலகம் தீக்கிரையாகி முற்றாக சிதைக்கப்பட்டுள்ளது. அதன் பொறுப்பாளர்களில் ஒருவாரான ஊடகவியலாளர் எக்னெலிகொட காணாமற்போய் ஒரு ஆண்டு கடந்த நிலையில், இத் தீமூட்டல் நடந்துள்ளது. அவருக்கு முன் காணாமற்போன பல ஊடகவியலாளர்களுக்கும் நடந்த விதமாகவே அவருக்கும் நடந்திருக்கும் என அஞ்சப்படுகிறது. அந்த அச்சத்தை உறுதிப்படுத்துகிற விதமாகவே சந்தர்ப்ப சூழ்நிலைகளும் சாட்சியங்களும் அமைந்துள்ளன. எனினும் அவரது மனைவி அவர் இறக்கவில்லை என்றே தான் நம்புவதாகக் கூறுகிறார். அது அவரது அன்பின் விளைவான ஒரு நிலைப்பாடாக இருக்கலாம் என்பதற்கும் மேலாக, அது இந்த நாட்டின் அரசிற்குங் காவற் துறைக்கும் விடுக்கப்பட்டுள்ள ஒரு வலிய சவாலுமாகும். ஏனெனில், கணவர் காணாமற்போனதைப் பற்றி உடனடியாகவே அவர் காவல் நிலையத்தில் முறைப்பட்டிருந்தார். காவல் நிலைய அலுவலர்களது அசட்டை …

