Articles in the ஈழம் Category
அரசியல், அறிக்கைகள், ஈழம் »
ஊடகங்களுக்கான அறிக்கை 21.08.2011
அண்மைய வாரங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள “கிறீஸ் பூதம்” என்னும் பெயரிலான மர்ம மனிதத் தாக்குதல் பேரினவாத ஒடுக்குமுறையின் மற்றொரு கோர வடிவமேயாகும். இது தற்செயலானதாகவோ அல்லது கீழ்மட்டத்திலிருந்தோ தோற்றுவிக்கப்பட்ட ஒன்றல்ல. ஆட்சி அதிகாரத்தின் உயர் மட்டத்திலிருந்து நன்கு திட்டமிட்ட உள்நோக்க அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவே நம்பப்படுகிறது. இத்தகைய கிறீஸ் பூத மர்ம மனிதர்களால் மலையகத் தமிழ் மக்களும் வடக்குக் கிழக்கின் தமிழ் முஸ்லீம் மக்களுமே தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டும் வருகிறார்கள். இதனால் அச்சம் பீதிகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்கள் அன்றாட அலுவல்கள் தொழில்களுக்குச் செல்ல முடியாதுள்ளதுடன் மாணவர்களின் கல்வியும் கடும் பாதிப்பைப் பெற்றுள்ளது. ஆனால் ஆளும் அதிகாரத் தரப்பில் இருந்து இது பற்றி அக்கறைப்படுவதாகவோ அல்லது அதற்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவோ இல்லை. அதனால் இக் கிறீஸ் பூத மர்ம மனிதத் தாக்குதல்கள் அதிகாரபீடத்தின் ஆசீர்வாதத்துடன் …

