காவத்தையில் தேசிய கலை இலக்கியப்பேரவையின் முழுமதி ஒன்றுகூடல்
தேசிய கலை இலக்கியப் பேரவையின் இரத்தினபுரி கிளையின் பௌர்ணமி ஒன்று கூடல் 2012.07.03 காலை 10 மணிக்கு கிளைச் செயலாளர் பா. மகேந்திரன் தலைமையில் காவத்தை நகரத்தில் உள்ள விடியல் கல்வியகத்தில் இடம்பெற்றது.
மாற்று சினிமா தேடலுக்கான களமாக விளங்கிய இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை ஊடகக் கல்லூரியின் விரிவுரையாளர் நடராஜா மணிவாணன் அவர்களும் தெரன வானொலியின் சுவடியாளர் மதுரங்க வீரசிங்க அவர்களும் கலந்துக் கொண்டனர்.
What is that?, யாதுமாணவள், பசி, குரு, Ward No.325 ஆகிய குறுந்திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதன் பின்னர் சபையோரின் பங்குபற்றலுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
சிறப்பு விருந்தினர்கள் தமது உரைகளில் காண்பிக்கப்பட்ட திரைப்படங்கள் தொடர்பாக தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதோடு குறுந்திரைப்படங்களின் அவசியத்தையும் வழியுறுத்தினர். பிற்பகல் 01.30 மணிக்கு பேரவையின் நிகழ்வுகள் நிறைவுப் பெற்றது.
















Leave your response!