Home » இலக்கியம்

முப்பரிமாணம்

30 March 2012 பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 426 One Comment

“காதல் தோல்வி”

காதல் என்று வந்து விட்டால், காதல் தோல்வி என்பது ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல் சாதாரண விடயம். மாத்தளை ராமு வேணியிடம் தோல்வியுற்றுக், காதல் காச்சலில் தவிக்கிறான். ஓழுங்காகச் சாப்பிடுவதும் இல்லை, தூங்குவதும் இல்லை. கொஞ்சமாவது மனதைத் தேற்றிக் கொள்வதற்கு வீட்டின் பொது அறையில் உள்ள டேப் ரெக்கோடரில்

“… பெண்ணைப் படைக்காதே பிரம்மனே
பாவம் ஆண்களே பரிதாபம் நாங்களே
எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம்… “

என்ற பாடல் வரிகளைத் திரும்பத் திரும்ப ரிவைன்ட் செய்து செய்து கேட்டுக் கொண்டிருக்கிறான்.


சம்மாந்துறை சஹீலும் அவன் பங்கிற்குத் தோல்வியைக் கண்டுவிட்டுதான் இருக்கிறான். அவனைக் காதலித்த ரிஸ்னா நேற்றுடன் தன்னை மறந்து விடும்படிச் சொல்லிவிட்டாள். சஹீல் தனது அறையின் கதவைப் பூட்டிக் கொண்டு தனது சீடி பிளேயரின் அருகில் இருந்து கேட்கும் ஒரே பாடல்

“யம்மா யம்மா காதல் பொன்னம்மா
அட என்ன விட்டு போனதென்னம்மா….
அட ஆணோட காதல் கை ரேக போல….”

ஷாலிக்காவிடம் தோற்ற கல்கிஸ்ஸ ரொஷான் பைத்தியக்காரனைப் போல் இருக்கின்றான். ரொஷான் யாரிடமும் போசுவதில்லை. iPodஐக் காதில் போட்டவாறு, யானியின் இசையை அவன் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறான்.  தனிமையுடன் ஏற்படும் குளிரை மேலும் அதிகரித்துக்கொள்ள காரில் ஏசியை நடுங்கும் அளவிற்கு கூட்டி வைத்துக் கொண்டுள்ளான்.

கடிகாரம் உலகத்திற்கு வந்தது என்னவோ நேரம் பார்ப்பதற்கு என்றாலும் இன்று கைக்கடிகாரத்தை அணிபவர்கள் நேரம் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் ஒரு ஃபெஷனையும் எதிர்பார்க்கின்றார்கள். கந்தப்பலையைச் சேர்ந்த சேகர் புதிய ஃபெஷன் கடிகாரம் ஒன்றை வாங்கக் கண்டிக்கு வந்தான். கடையில் இருக்கின்ற அனைத்து வகையிலான கடிகாரத்தையும் பார்த்துவிட்டு கடைசியில் 500 ரூபா பெறுமதியான கடிகாரம் ஒன்றை வாங்கினான்.

கெக்கிராவ சந்தன தான் கொழும்பிற்கு வந்தபோது வேலைக்குச் செல்லும்போது அணிவதற்காகப் புதிய டிசைன் கடிகாரம் ஒன்றைத் தேடினான். சுவிஸ் ரொலெக்சையும் சுவிஸ் ஒமேகாவையும்  தடவிப் பார்த்துக் கொண்டிருந்த அவன் கடைசியாக 1800 ரூபா பெறுமதியான சீன டிஜிட்டல் கடிகாரம் ஒன்றை வாங்கினான்.

தெஹிவலை கோகுலன் கடிகாரம் ஒன்றை வாங்க MC க்குச் சென்றான். கோகுலன் தொடர்ந்து பாவித்தது சுவிஸ் பனேரியா கடிகாரம். இம்முறையும் கோகுலன் அதே பிராண்ட்டில் புதிய ஃபெஷன் கடிகாரத்தை வாங்கினான். அதன் விலை 50,000 ரூபா. அதனைப் பார்த்தவுடன் அவ்வளவு விலையானது எனக் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அந்த பிரான்ட் பற்றித் தெரிந்தவர்களுக்கு மட்டும் அதன் விலையைப் பற்றியும் தெரியும்.

இன்று எது அழகு என்று சொல்லித்தருவது யார் என்று உங்களுக்குத் தெரியும். பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி எவை எல்லாம் அழகிற்குக் கேடானவை என்பதை பட்டியலிட்டு நமது ஊடகங்கள் நாளும் பொழுதும் சொல்லித்தருகின்றன.

அதன் விளைவாகத் தற்கால இளம் பெண்களுக்குத் தொப்பை இருத்தல் அவ்வளவு விருப்பமான விடயமல்ல. உடற் கட்டமைப்பைப் பராமரிக்கத் தொப்பை  இல்லாமல் இருத்தல் வேண்டும்.  எம்பிலிப்பிட்டிய நயனாவிற்கும் செவ்வந்திக்கும் தொப்பை வைத்தல் பெரும் பிரச்சினையாக ஆகிவிட்டது. தொப்பையைக் குறைக்க அவர்கள் முடிவு எடுத்தனர். எனவே ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் அவர்கள், வேலை விட்டுப் போகையில் சற்றுத் தூரமான பாதையினூடாக வீட்டுக்கு நடந்து செல்லத் தீர்மானித்தார்கள். நாள் முழுக்க ஆடைத் தொழிற்சாலையில் உழைத்துச் செத்து வரும் அவர்களுக்கு வழமையை விட ஒரு கிலோமிட்டர் தூரம் நடந்து செல்லுதல் கஷ்டமாகத் தோன்றவில்லை, தொப்பையைக் குறைப்பதற்காக அந்த வேதனையைத் தாங்கிக் கொண்டு தொடர்ந்து நடக்க ஆரம்பித்து விட்டார்கள்.

கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த ரீமா தொப்பையைக் குறைப்பதற்குக் கண்டியில் உள்ள ஜிம் ஒன்றில் 1500 ரூபா மாதக் கட்டணத்திற்கு உடற்பயிற்சி செய்வதற்குச் சேர்ந்தாள். என்றாலும் ரீமாவுக்குத் தொழில் காரணமாக ஜிம்முக்கு போக முடியாமலுள்ளது. தொழிலை முடித்து விட்டு ஜிம்முக்கு செல்வதற்கு ரீமா ஒவ்வாரு நாளும் பெரும் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஏனைய எல்லாருக்கும் போலவே லக்கிகாவுக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது. என்றாலும் கஷ்டப்பட்டு தொப்பையைக் குறைப்பதற்கு அவளுக்கு இஷ்டம் இல்லை. எனவே அவள் கஷ்டமின்றி வயிற்றைக் குறைப்பது தொடர்பாக யோசித்தாள். அவளின் நன்பி மெக்டொனல்டில் வைத்து அன்றொரு நாள் “பெட் பேர்ன்ட்” என்ற புதிய சிகிச்சையைக் பற்றி கூறிய செய்தி ஞாபகத்திற்கு வந்தது. அச் செய்திக்கு அமைய அவள் மாதம் 50,000 ரூபா செலுத்தி பெட் பேர்ன்ட் நிலையத்துக்கு செல்கிறாள்.

ஓரே மாதிரி ஒரே வடிவில்…

நவீன், ரொஷான், வினோதன் மூவரும் இன்று Galleface வந்துள்ளனர்.

நவீன் மொன்டேரோ ஒன்றில் வந்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் விந்தியா வருவதாகச் சொல்லியிருந்தாள். நவீன் அவள் வரும் வரை கடற்கரைப் பகுதிக்கு சென்றான்.

ரொஷான் மோட்டர் பைக் ஒன்றில் வந்தான். நிவேதா ‘ஷோர்ட் லீவ்’ எடுத்துக்கொண்டு ரொஷானைச் சந்திக்க வருவதாகக் கூறியபடியால் ரொஷான் காத்துக் கொண்டிருக்கின்றான்.

வினோதன் பேரூந்தில் வந்தான். வனிதா வரும் வரை வினோதன் பார்த்துக் கொண்டிருந்தான்.

மூவரும் கடற்கரையோரம் வேவ்வேறு இடங்களிலே ஒருவருக்கு ஒருவரைத் தெரியாது நின்று கொண்டிருந்தாலும், மூவரும் கோல்பேஸ் வந்த நோக்கம் ஒன்று. ஆனால் மூவரையும் தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஒரு ஒற்றுமை தென்பட்டது. அந்த ஒற்றுமை, அவர்கள் மூவரும் நீல நிற டெனிம் காற்சட்டையை அணிந்திருந்தார்கள்.

நவீனின் டெனிம் “லிவைஸ்”. சென்ற வாரம் வாங்கியது. புதிதாக வந்த டிசைன். ஆதலால் நவீன் கண்டவுடன் வாங்கிவிட்டான். அதன் விலை 16,000 ரூபாய்.

ரொஷான் தன் டெனிமை நோ லிமிட்டில் வாங்கினான். தொடர்ந்து ஒரு டெனிமை 2 வருடங்கள் பாவித்து நிறம் மாறியபடியால், இம் முறைச் சம்பளத்திற்கு 2000 ரூபாய்க்கு அந்த டெனிமை வாங்கினான்.

வினோதன் டெனிம் வாங்கியது மதிவெல பாதை ஓரத்தில் திடீரெனப் போடப்பட்ட சேல் ஒன்றில்.  அந்த இடத்தில் குறைந்த விலைக்கு நிறைய டெனிம்கள் விற்கப்பட்டன. ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கழிக்கப்பட்ட ஆடைகளே அவ்விடத்தில் போடப்பட்டிருந்தன. வினோதன் அவற்றில் தேடித் தேடி 500 ரூபாய்க்கு ஒரு டெனிமை வாங்கினான்.

மூன்று வகையான விலைகளைக் கொண்டிருந்த போதும் மூன்று டெனிம்களினதும் நிறமும் தோற்றமும் ஒன்றுதான்.


புதியபூமி (மார்ச் 2012)

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...

One Comment »

  • Thina said:

    its a different style for express an opinian strongly & affectively.who wrote this article? my wishes to her or him.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.