ஏலவே வடக்குக் கிழக்கு மக்களை யுத்தத்தால் கொன்றொழித்து, வந்த பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இப்போது நாட்டின் ஏகப் பெரும்பான்மையான அனைத்துத் தொழிலாளர்கள் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்களை விலை உயர்வுகளால் சாகடிக்க ஆரம்பித்துள்ளது. இவ் இடத்தில் இன, மொழி, மதப் பேதங்களுக்க அப்பால் அனைத்து உழைக்கும் மக்களும் ஐக்கியப்பட்டு வீதியில் இறங்கிப் போராடுவதே ஒரே மார்க்கமாகும்.
Read the full story »ஏலவே வடக்குக் கிழக்கு மக்களை யுத்தத்தால் கொன்றொழித்து, வந்த பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இப்போது நாட்டின் ஏகப் பெரும்பான்மையான அனைத்துத் தொழிலாளர்கள் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்களை விலை உயர்வுகளால் சாகடிக்க ஆரம்பித்துள்ளது. இவ் இடத்தில் இன, மொழி, மதப் பேதங்களுக்க அப்பால் அனைத்து உழைக்கும் மக்களும் ஐக்கியப்பட்டு வீதியில் இறங்கிப் போராடுவதே ஒரே மார்க்கமாகும்.
அமெரிக்காவுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அமெரிக்கச் சனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையிலிருந்து அழைப்பு வந்ததாக நமக்குச் சொல்லப்பட்டது. பின்பு அமெரிக்க அரசுத் திணைக்களத்திலிருந்து அழைப்பு வந்ததாகச் சொல்லப்பட்டது. இரா. சம்பந்தனைத் தலைவராகக் கொண்ட நால்வர் குழு ஒக்ற்றோபர் 25ம் திகதி விமானமேறியது. இது நல்ல வாய்ப்பு எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் ஆரவாரித்தன. புலிகளின் தோல்வியை அடுத்து மகிந்த சிந்தனை ஆட்சியின் பேரினவாதச் செய்நிரல் துரிதமாக முன்னெடுக்கப்படும் ஒரு சூழலிற், கூட்டமைப்பின் அரசியல் இயலாமையின் அரசியலாகவே இருந்துவருகிறது. வடக்கு-கிழக்கில் வாக்குக்கள் பெறும் அலுவலைத் தவிர வேறெதையுமே கவனியாத கூட்டமைப்பு, இந்திய அழுத்தத்தின் கீழ் அரசாங்கத்துடன் பதினொரு முறை பேசியும் அரசாங்கத் தரப்பிலிருந்து எதையுமே வெல்லத் தவறிவிட்டது. இந் நிலையில் அமெரிக்காவின் ‘அழைப்பு’ நீரில் மூழ்குகிறவனின் கைக்கு எட்டிய ஒரு கயிறாகத் தெரிந்தது.
அந்த அழைப்புப் பற்றி ஐயங்கள் …
கசகறணம், விமல் குழந்தைவேல், காலச்சுவடு பதிப்பகம், 2011 யூலை, ப. 248, இந்தியா. 175.00
இது பல வகைகளிலும் வித்தியாசமான ஒரு நாவல். மட்டக்களப்புத் தமிழ் மொழியிலேயே கதை கூறப் பட்டுள்ளுமையும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கலந்து வாழுகிற ஒரு பகுதியான அக்கரைப்பற்றுப் பகுதியின் அன்றாட வாழ்வை ஒரு சந்தையை மையப்படுத்திய ஒரு கதையாகக் கூறுவது ஒரு முக்கியமான பண்பு. தேசிய இனப் பிரச்சனையின் விளைவான இன ஒடுக்கல் விடுதலைப் போராட்டத்துக்கு வழியமைத்த பின்பு, ஒன்றுபட்டு நின்ற இரண்டு சமூகங்களைப் பிளவுபடுத்தி அப் பிரதேசத்தைச் சீரழித்ததைக் கூறுவது இன்னொரு முக்கியமான பண்பு. குறுகிய இனப் பார்வையைத் தாண்டித், தமிழ்-முஸ்லிம் இன முரண்பாடு எவ்வாறு தனிமனித உறவுகளில் தொற்றிப் பகை வடிவம் பெறுகிறது என்பதயும் அவ்வாறு பகையாகாமல் தடுக்கச் செயற்பட்ட நல்ல மனிதர்களையும் நாம் கதையினூடு அறிகிறோம்.
மிக முக்கியமாகக், …
06.09.2011
மர்ம மனிதனின் நடமாட்டம் பற்றி மக்கள் மத்தியில் பேசப்படுவது கட்டுக்கதைகளோ வெறும் இட்டுக்கட்டுதல்களோ அல்ல. அல்லது சிலர் கூறுவது போன்று மக்களின் மனப் பிராந்தியோ, மாயையோ அல்ல. கடும் கறுப்பு நிறம் கொண்ட உருவ அமைப்பும் கோரமான முகமூடியும் கொண்ட தோற்றத்துடனேயே இம் மர்ம மனிதன் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் இறங்கிக் கொள்கிறான். குறிப்பாகப் பெண்கள் மீது தாக்கியும் பயப்பீதி கொள்ள வைத்தும் இம் மர்ம மனிதன் அட்டகாசம் செய்து வருவதைப் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நேரடியாகக் கண்டுள்ளனர். அது பற்றி அச்சம் பீதியுடன் விபரிக்கின்றனர். அதேவேளை இம் மர்மமனிதனைப் பிடிப்பதற்காகத் துரத்திச் செல்லும் மக்களை ராணுவத்தினர் அவ்வப் பகுதிகளில் தாக்கியும், வீடுகளைச் சேதப்படுத்தியுமுள்ளதை மக்கள் நேரடியாக எமக்குக் காட்டி மர்மமனிதனைப் பார்த்த கதைகளையும் எடுத்துரைத்தனர். அத்துடன் இம் மர்ம மனிதனை ராணுவத்தினர் பாதுகாத்து வருவதைத் தாம் …
ஊடக அறிக்கை – 02.09.2011
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனையை நிறைவேற்றாது இடைநிறுத்தும்படி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளமை மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு எதிராக மக்கள் முன்னெடுத்த வெகுஜனப் போராட்டங்களுக்குக் கிடைத்திருக்கும் தொடக்கநிலை வெற்றியாகும்.
உலகநாடுகளில் பெரும்பாலானவற்றில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது பூரணமாக இரத்துச் செய்யப்பட்டோ இடைநிறுத்தப்பட்டோ இருக்கும் நிலையில் ஐந்து நட்சத்திர ஜனநாயக நாடெனப் பேசப்படும் இந்தியாவில் இந்த மூவர் மீது மட்டுமன்றி, முற்றாகவே மரண தண்டனை நிறைவேற்றுவதைத் தடை செய்ய வேண்டும். இந்த மூவர் மீதான மரண தண்டனை நிறைவேற்றம் முழுமையாக இரத்துச் செய்யப்படுவதுடன், மரணதண்டனை நிறைவேற்றம் பூரணமாகவே சட்டப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
இலங்கையில் மரண தண்டனைகளுக்காக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மரணதண்டனைகள் நிறைவேற்றப்படாது இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேல் நீதிமன்றம் விதிக்கும் மரணதண்டனைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் உயர்நீதிமன்றம் …